96. | கொடிக ளிடைக்குயில் கூவு மிடம்மயி | | லாலும் மிடம்மழு வாளுடைய | | கடிகொள் புனற்சடை கொண்ட நுதற்கறைக் | | கண்டன் இடம்பிறைத் துண்டமுடிச் | | செடிகொள் வினைப்பகை தீரும் இடம்திரு | | வாகும் இடம்திரு மார்பகலத் | | தடிக ளிடம்மழல் வண்ணன் இடம்கலிக் | | கச்சி அனேகதங் காவதமே. | | 3 |
97. | கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையுங் | | கங்கையுந் திங்களுஞ் சூடுசடை | | மங்குல் நுழைமலை மங்கையை நங்கையைப் | | பங்கினிற் றங்க உவந்தருள்செய் |
செய்தமை அறியற்பாலது. 3. பொ-ரை: துன்பத்தைக் கொண்ட வினையாகிய பகை நீங்குவதும், நன்மை வளர்வதும், மழுப்படையை யுடைய, விளக்கத்தைக் கொண்ட நீரைச் சடையில் ஏற்ற, பிறைத் துண்டமாகிய கண்ணியை யணிந்த நெற்றியை யுடைய நீலகண்டனும், அழகிய மார்பிடத்தனவாகிய பல அணிகலங்களையுடைய தலைவனும், நெருப்புப் போலும் நிறத்தை யுடையவனும் ஆகிய இறைவனுக்கு உரியதும் ஆகிய இடம், கொடி போலும் மகளிர் பாடல்களுக்கு இடையே குயில்கள் கூவுவதும், அவர் ஆடல்களுக்கு இடையே மயில்கள் ஆடுவதும் ஆகிய ஆரவாரத்தை யுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள. ‘திருவனேகதங்காவதம்’ என்னும் திருக்கோயிலே. கு-ரை: "கொடிகள்" என்றது உருவகம்; அஃது ஆகு பெயராய் அவரது தொழில் மேல் நின்றது. மகளிரது பாடல் ஆடல்களின் மிகுதி உணர்த்தற் பொருட்டு, அவரது பாடல் ஆடல்களுக்கிடையே, குயிலும் மயிலும் கூவுதலும், ஆடுதலும் செய்வனவாக அருளினார். ‘கண்ணி’ எனினும் ‘முடி’ எனினும் ஒக்கும். ‘மார்ப+கலம்’ எனப் பிரிக்க. ‘கலம்’ என்றது நல்ல அணிகலங்களையும், தலை மாலை முதலியவற்றையும் ஒருங்கு கருதி யென்க. 4. பொ-ரை: தேனால் நுழைவிக்கப்பட்டனவாகிய வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மாலையையும், கங்கையையும், பிறையையும்
|