| சங்கு குழைச்செவி கொண்டரு வித்திரள் | | பாயவி யாத்தழல் போலுடைத்தம் | | அங்கை மழுத்திகழ் கையன் இடங்கலிக் | | கச்சி அனேகதங் காவதமே. | | 4 |
98. | பைத்த படத்தலை ஆடர வம்பயில் | | கின்ற இடம்பயி லப்புகுவார் | | சித்தம் ஒருநெறி வைத்த இடந்திகழ் | | கின்ற இடந்திரு வானடிக்கே | | வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள | | வைத்த இடம்மழு வாளுடைய | | அத்தன் இடம்மழல் வண்ணன் இடங்கலிக் | | கச்சி அனேகதங் காவதமே. | | 5 |
அணிந்த சடையினையுடைய, மேகங்கள் தவழும் மலையில் வளர்ந்த மங்கையும் சிறந்த தேவியுமாகிய உமையை ஒரு பாகத்தில் பொருந்தியிருக்குமாறு மகிழ்ந்து வைத்து உயிர்கட்கு அருள் புரிகின்ற, சங்கக் குழையை அணிந்த காதினின்றும் வெள்ளொளிக் கற்றையாகிய அருவித்திரள் பாய, அவற்றாலும் அவியாத நெருப்புப் போலத் தோன்றுதலையுடைய அங்கையின் மழுவானது இடையறாது ஒளி வீசுகின்ற தன்மையையுடைய இறைவனது இடம், ஆரவாரத்தையுடைய கச்சி மாநகர்க்கண் உள்ள, ‘திருவனேகதங்காவதம்’ என்னும் திருக்கோயிலே. கு-ரை: ‘சங்கக் குழை’ என்பது, எதுகைநோக்கி, "சங்கு குழை" என இயல்பாய் நின்றது. "செவிகொண்டு’ என்பது வேற்றுமை மயக்கம். அருவி, உருவகம். ‘பாய’ என்னும் அகரந்தொகுத்தல். ‘பாய வியர்த்தழல்’ என்பதும் பாடம். "போல் உடை" என்றதற்கு, ‘போலு தலை யுடைய’ என உரைக்க. "கையன்" என்பதிலுள்ள கை, தன்மை. ‘தம்’ என்பது, ஒருமைப் பன்மை மயக்கம். ‘தன்’ எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். 5. பொ-ரை: ஆடும் பாம்பாகிய ஆதிசேடனது பையின் தன்மையைப் பெற்ற படத்தினையுடைய தலையின்கண் நீங்காதிருக்கின்ற இடமாகிய நிலவுலகத்தில் வாழப்புகுவோர், தமதுள்ளத்தை ஒரு
|