99. | தண்ட முடைத்தரு மன்தமர் என்தம | | ரைச்செயும் வன்றுயர் தீர்க்குமிடம் | | பிண்ட முடைப்பிற வித்தலை நின்று | | நினைப்பவர் ஆக்கையை நீக்குமிடம் | | கண்ட முடைக்கரு நஞ்சை நுகர்ந்த | | பிரான திடங்கடல் ஏழுகடந் | | தண்ட முடைப்பெரு மான திடங்கலிக் | | கச்சி அனேகதங் காவதமே. | | 6 |
நெறிக்கண்ணே வைத்தபொழுது, அவர்க்கு உயர்ந்து விளங்குவதும், திருவாளனாகிய சிவபிரானது திருவடிக் கண்ணே பிறழாது வைத்த மனத்தையுடையவராகிய அடியார். தம் மனம், விரும்பிக் கொள்ளுமாறு அதனுள் இருத்தப்பட்டதும், மழுப்படையையுடைய தலைவனும், நெருப்புப்போலும் நிறத்தையுடையவனும் ஆகிய அப்பெருமானுக்கு உரித்தாயதும் ஆகிய இடம், ஆரவாரத்தையுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள, ‘திருவனேகதங்காவதம்’ என்னும் திருக்கோயிலே. கு-ரை: ‘அரவத் தலை’ என்பது, ‘தலை அரவம்’ என மாறி நின்றது. பயிலப் புகுவார், மக்களாய்ப் பிறந்தார் "வைத்த விடம்" இரண்டனுள், முன்னது வினை எச்சம்; அதனுள், அத்துச் சாரியை தொகுத்தலாயிற்று. 6. பொ-ரை: தண்டாயுதத்தை யுடைய இயமனது ஏவலாளர், என் சுற்றத்தாராகிய சிவனடியாரை நலியக் கருதும் வலிய துன்பத்தைத் தீர்ப்பதும், உடம்பை யுடைய இப்பிறவியின்கண் மனம் பொருந்தி நின்று நினைப்பவரது பிறவியை அறுப்பதும், தனது கண்டம் உடைத்தாயுள்ள கரிய நஞ்சினை, உண்ணும் பொருளாக உண்ட தலைவனும், ஏழு கடல்களின் உள்ளே உள்ள நிலமேயன்றி அண்டம் முழுவதையும் உடைய பெரியோனும் ஆகிய இறைவனுக்கு உரித்தாயதும் ஆகிய இடம், ஆரவாரத்தை யுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள, ‘திருவனேகதங்காவதம்’ என்னும் திருக்கோயிலே. கு-ரை; நமன் தமர் நலியாமையும், பிறவி எய்தாமையுஞ் செய்தல் கூறவே, இறைவனை அடைவித்தல் சொல்ல வேண்டாவாயிற்று. ‘கடந்த’ என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
|