100. | கட்டு மயக்க மறுத்தவர் கைதொழு | | தேத்தும் இடங்கதி ரோனொளியால் | | விட்ட இடம்விடை யூர்தி இடங்குயிற் | | பேடைதன் சேவலொ டாடுமிடம் | | மட்டு மயங்கி அவிழ்ந்த மலர்ஒரு | | மாதவி யோடு மணம்புணரும் | | அட்ட புயங்கப் பிரான திடங்கலிக் | | கச்சி அனேகதங் காவதமே. | | 7 |
101. | புல்லி யிடந்தொழு துய்துமெ னாதவர் | | தம்புர மூன்றும் பொடிப்படுத்த | | வில்லி இடம்விர வாதுயிர் உண்ணும்வெங் | | காலனைக் கால்கொடு வீந்தவியக் | | கொல்லி இடங்குளிர் மாதவி மவ்வல் | | குராவகு ளங்குருக் கத்திபுன்னை | | அல்லி யிடைப்பெடை வண்டுறங் குங்கலிக் | | கச்சி அனேகதங் காவதமே. | | 8 |
7. பொ-ரை: பாசப் பிணிப்பால் உண்டாகும் திரிபுணர்வை நீக்கியவர், கைகுவித்துக் கும்பிட்டுத் துதிப்பதும், இடபவாகனத்தை யுடையவனும், அட்டமா நாகங்களையும் அணிந்தவனுமாகிய இறைவனுக்கு உரித்தாயதுமான இடம், பகலவனது ஒளியினின்று நீங்கியதும், குயிற் பேடை தனது சேவலோடு கூடி விளையாடுவதும் ஆகிய சோலைக் கண் ஒப்பற்ற மாதவியில் தேன் ததும்பி மலர்ந்த மலர், மணத்தைப் பொருந்துகின்ற, ஆரவாரத்தையுடைய கச்சிமா நகர்க்கண்ணுள்ள, ‘திருவனேகதங்காவதம்’ என்னும் திருக்கோயிலே. கு-ரை: "ஒளியால்", "மாதவியோடு" என்றன உருபு மயக்கம். ‘விட்டுமிடம்’ என்பது பாடமாயின், டகரமெய் விரித்தல் என்க. 8. பொ-ரை: ‘முன்பே அடையப் பட்டவனைக் கடைபோகத் தொழுது உய்வோம்’ என்று நினையாது, புத்தனது பொய்யுரையால் மயங்கிய அசுரரது அரண்கள் மூன்றினையும் சாம்பலாக்கிய வில்லை யுடையவனும், யாவரிடத்தும் கண்ணோடாது உயிரை வௌவும்
|