பக்கம் எண் :

518
 
102சங்கை யவர்புணர் தற்கரி யான்றள

வேனகை யாள்வி ராமிகுசீர்

மங்கை யவள்மகி ழச்சுடு காட்டிடை

நட்டநின் றாடிய சங்கரனெம்

மங்கைய வன்னன லேந்து பவன்கனல்

சேரொளி யன்னதொர் பேரகலத்

தங்கை யவன்னுறை கின்ற இடங்கலிக்

கச்சி அனேகதங் காவதமே. 

9



கொடிய காலனை அழிந்தொழியும்படி காலால் கொன்றவனும் ஆகிய இறைவனுக்கு உரித்தாய இடம், குளிர்ந்த வனமல்லிகை, முல்லை, குரா, மகிழ், குருக்கத்தி, புன்னை இவற்றின் மலர்களது அகவிதழில் பெண் வண்டுகள் உறங்குகின்ற, ஆரவாரத்தை யுடைய கச்சிமாநகரில் உள்ள, ‘திருவனேகதங்காவதம்’ என்னும் திருக்கோயிலே.

கு-ரை: ‘வீந்தவிதல்’ ஒருபொருட் பன்மொழி. மாதவி, குருக்கத்தியின் ஓர் வகையுமாம்.

9. பொ-ரை: ஐயப்பாடுடையவர் அடைதற்கரியவனும், முல்லையரும்புபோலும் நகையினை யுடையாளாகிய, என்றும் பிரிவில்லாத, மிக்க புகழை யுடைய உமாதேவி மகிழும்படி சுடு காட்டில் நின்று நடனமாடுகின்ற சங்கரனும், எம் அங்கைப் பொருளாய் உள்ளவனும், நெருப்பை ஏந்துபவனும், நெருப்பிற் பொருந்தியுள்ள ஒளிபோலும் ஒளியை யுடைய பெரிய மழுப் படையை ஏந்திய அங்கையை யுடையவனும் ஆகிய இறைவன் நீங்காது உறைகின்ற இடம், ஆரவாரத்தையுடைய கச்சிமா நகர்க் கண் உள்ள, ‘திருவனேகதங்காவதம்’ என்னும் திருக்கோயிலே.

கு-ரை: ஏல், உவம உருபு. ‘நகையாள் தவிரா’ எனப்பிரிக்க.

‘பெரியகலம்’ என்பது, ‘பேரகலம்’ என மருவி வந்தது. "எம் அங்கைய வன்" என்றதனை. ‘‘தடக்கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன்’’ என்ற திருவாசகத்தோடு பொருந்தவைத்து நோக்குக. (தி.8 திருவா. திருவண். 162.) ‘சங்கரனே அங்கையினல்லன லேந்துமவன்’ என்பதும் பாடம்.