பக்கம் எண் :

519
 
103வீடு பெறப்பல ஊழிகள் நின்று

நினைக்கும் இடம்வினை தீருமிடம்

பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு

மேவினர் தங்களைக் காக்கும்இடம்

பாடு மிடத்தடி யலான்புகழ் ஊரன்

உரைத்தஇம் மாலைகள் பத்தும்வல்லார்

கூடும் இடஞ்சிவ லோகன் இடங்கலிக்

கச்சி அனேகதங் காவதமே. 

10

திருச்சிற்றம்பலம்



10. பொ-ரை: முத்தி பெறுதற் பொருட்டுப் பல்லூழி கால மாயினும் இவ்வுடம்போடே நின்று இறைவனை நினைத்தற்குரிய இடமும், அதனால் வினைநீங்கப்பெறும் இடமும், பெருமையை அடைதற்குரிய வழியைப் பெரியோரது அடிக்கீழ் நின்று பெற்று, அவ்வழியாலே விரும்பி வந்தவர்களைப்பிறவிக் கடலில் வீழாதவாறு காக்கும் இடமும் ஆகிய, ஆரவாரத்தையுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள, ‘திருவனேகதங்காவதம்’ என்னும் திருக்கோயிலைப் பாடப் புகும் பொழுது, சிவபிரானுக்கு அடியவனாகிய, புகழையுடைய நம்பியாரூரன் பாடிய இச் சொல்மாலைகள் பத்தினையும் நன்கு பாடவல்லார் அடையும் இடம், சிவபிரானது இடமே யாகும்.

கு-ரை: காஞ்சி, ஊழிக்காலத்தும் அழிவிலது எனப்படுதலின், ‘‘பல ஊழிகள் நின்று நினைக்குமிடம்’’ என்றருளினார், ‘‘பெரியோர திடங்கலிக் கச்சியனேகதங் காப்பனிடம்’’ என்பதொரு பாடமும் உண்டு. சிவபிரானை, ‘சிவலோகன்’ என்றது, ‘அவன் இடமாவது அதுவே’ என, பின்னர் வருவதனை யுணர்த்தற் பொருட்டு. இங்ஙனம் உரையாக்கால், இத் திருப்பதிகப் பயன் சிறப்புடைத்தாமாறில்லை.

ஏயர்கோன் கலிக்காமர் புராணம்
 

அங்கண் அமர்வார் அனேகதங்கா

வதத்தை எய்தி உள்ளணைந்து

செங்கண் விடையார் தமைப்பணிந்து

தேனெய் புரிந்தென் றெடுத்ததமிழ்

தங்குமிடமா மெனப் பாடித்

தாழ்ந்து பிறவும் தானங்கள்

பொங்குகாத லுடன் போற்றிப்

புரிந்தப் பதியில் பொருந்துநாள்

-தி. 12 சேக்கிழார்.