பக்கம் எண் :

520
 

11. திருப்பூவணம்


பதிக வரலாறு:

சுந்தரர் வேந்தர்களுடன் மதுரையில் தங்கியிருந்த நாள்களில் திருப்பூவணம் செல்லும் பொழுதில் தொண்டர்கள் இத்தலத்தைக் காட்டக் கண்டு ‘‘பெருமான் உறையும் பூவண மீதோ’’ என்று பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 கழறிற்றறிவார். புரா.98-99)

குறிப்பு: இத்திருப்பதிகம் ‘இறைவர் எழுந்தருளியுள்ள திருப்பூவணம் என்னும் தலம் இதுதானோ’ என அடியவர்களை வினவி அருளியது.

பண்: இந்தளம்

பதிக எண்: 11

திருச்சிற்றம்பலம்

104.திருவுடை யார்திரு மாலய னாலும்
உருவுடை யார்உமை யாளையொர் பாகம்
பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும்
புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ!

1

105.எண்ணி யிருந்து கிடந்தும் நடந்தும்
அண்ண லெனாநினை வார்வினை தீர்ப்பார்


1. பொ-ரை: திருமால், பிரமன் ஆகிய காரணக் கடவுளரிலும் மேலான செல்வத்தை யுடையவரும், தமது திருமேனியில் உமையம்மையை ஒரு பாகமாக உடையவரும், அன்புடையவராய்த் தம்மை அடைவாரது வினைகளைத் தீர்க்கும் விருப்பம் உடையவரும் ஆகிய இறைவர் எழுந்தருளியுள்ள, ‘திருப்பூவணம்’ என்னும் தலம் இதுதானோ?

கு-ரை: ‘அயனால்’ என்னும் மூன்றாம் உருபை, ‘அயனில்’ என ஐந்தாம் உருபாகத் திரிக்க, ‘மால், அயன்’ என்பாரது செல்வமும், அவரிடத்து நிலைபெற்றிருப்பனவல்லவாகலின், சிவபிரானது வரம்பிலின்பம் ஒன்றே எல்லாவற்றிலும் மேலதாயிற்று.

2. பொ-ரை: இருப்பினும், கிடப்பினும், நடப்பினும், தம்மையே முதல்வராக ஓர்ந்து நினைவாரது வினைகளை நீக்குபவரும், அறவடி