| பண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப் புண்ணிய னார்உறை பூவணம் ஈதோ!
| | 2 |
106. | தெள்ளிய பேய்பல பூத மவற்றொடு நள்ளிருள் நட்டம தாடல் நவின்றோர் புள்ளுவ ராகும் அவர்க்கவர் தாமும் புள்ளுவ னார்உறை பூவணம் ஈதோ!
| | 3 |
107. | நிலனுடை மான்மறி கையது தெய்வக் கனலுடை மாமழு ஏந்தியோர் கையில் அனலுடை யார்அழ கார்தரு சென்னிப் புனலுடை யார்உறை பூவணம் ஈதோ! | | 4 |
வினருமாகிய இறைவர், பண்ணாகிய இசைபோலப் பொருந்திய மொழியினையுடைய மகளிர் பலர் இனிய பாடல்களைப்பாட எழுந்தருளியிருக்கின்ற, ‘திருப்பூவணம்’ என்னும் திருத்தலம் இதுதானோ? கு-ரை: ஓர்தலாவது ‘‘சிவன் எனும் ஓசையல்லது அறையோ’’ (தி.4 ப.8 பா.1) என்றாற்போலும் ஆசிரியத் திருமொழிகளைப் பொருந்துமாறுபற்றி ஆராய்தல். அவ்வாராய்ச்சி பேதைமையைத் தேய்க்குமாதலின், அதன்பின் சிவபிரான் ஒருவனே முதல்வன் என்னும் உணர்வு அசையாது நிற்பதாம். அண்ணல் என்றது பன்மை ஒருமை மயக்கம். 3. பொ-ரை: தெளிவையுடைய பல பேய்பூதங்களுடன், செறிந்த இருளில் நடனத்தைப் புரிகின்றவரும், வஞ்சகராகின்றவருக்குத் தாமும் வஞ்சகராவோரும் ஆகிய இறைவர் எழுந்தருளியுள்ள, ‘திருப்பூவணம்’ என்னும் திருத்தலம் இதுதானோ? கு-ரை: சிவபிரானது கணங்களாகிய பேய்பூதங்கள் ‘சிவபிரானே முதல்வன்’ என்னும் தெளிவுணர்வுடைமையின், ‘‘தெள்ளிய பேய்பூதம்’’ என்று அருளினார்; அவைகளை, நற்கணம் (தி.11 அற்புதத் திரு. 86) என்று அம்மை அருளிச் செய்ததும் அது பற்றி என்க. வேடரைக் குறிக்கும், ‘புள்ளுவர்’ என்னும் பெயர் இங்கு அவர் போலும் வஞ்சகரைக் குறித்தது. 4. பொ-ரை: நிலத்தை வாழும் இடமாக உடைய மான் கன்று கையிடத்ததாக, தெய்வத் தீயாம் தன்மையையுடைய பெரிய மழுவை
|