பக்கம் எண் :

522
 
108.நடையுடை நல்லெரு தேறுவர் நல்லார்
கடைகடை தோறிடு மின்பலி என்பார்
துடியிடை நன்மட வாளொடு மார்பில்
பொடிஅணி வார்உறை பூவணம் ஈதோ! 

5

109. மின்னனை யாள்திரு மேனி விளங்கஓர்
தன்னமர் பாகம தாகிய சங்கரன்
முன்னினை யார்புரம் மூன்றெரி யூட்டிய
பொன்னனை யான்உறை பூவணம் ஈதோ!

 6



ஒரு கையிற் பிடித்து, அதனோடே மற்றொரு கையில் நெருப்பை யுடையவரும் ஆகிய இறைவர் எழுந்தருளியுள்ள ‘திருப்பூவணம்’ என்னும் திருத்தலம் இதுதானோ?

கு-ரை: முதலடி மூன்றாம் எழுத்து எதுகை பெற்றது; அன்றி ‘உயிரெதுகை’ எனலுமாம், ‘ஓர் கையில்’ என்பது, முன்னும் சென்றியையும், ‘முழு, நெருப்பு’ என்னும் இவற்றையும், அவற்றிற்கு மாறாய நீரையும் ஒருங்கு தாங்க வல்லவர் என, இறைவரது ஆற்றலை வியந்தருளிச் செய்தவாறு.

5. பொ-ரை: பெருமித நடையையுடைய நல்ல ஆனேற்றின் மீது ஏறுபவரும், மகளிரது வாயில் தோறும் சென்று, ‘பிச்சை இடுமின்’ என்று இரப்பவரும், உடுக்கை போலும் இடையினையுடைய தேவியின் அழகிய மேனியின் பொலிவோடு, சாம்பலைப் பூசிக்கொள் வோரும் ஆகிய இறைவர் எழுந்தருளியுள்ள, ‘திருப்பூவணம்’ என்னும் திருத்தலம் இதுதானோ?

கு-ரை: ‘பெருமிதம்’ என்பது இசை எச்சமாய் வந்தது. அறமே ஆனேறாயினமையின், ‘நல்லெருது’ என்று அருளிச்செய்தார். ‘கடை கடை’ என்றது அடுக்கு. ‘தோறு’ என்றதன் பின் உம்மும், ‘சென்று’ என்பதும் எஞ்சி நின்றன. ‘நன்மடவாளொடு’ என்ற குறிப்பினால் இவ்வாறுரைத்தல் பெறப்பட்டது.

6. பொ-ரை: மின்னல்போலும் மாதராள் திருமேனி தனது திரு மேனியின் ஒரு பாகத்தில் விளங்க விரும்பிவைத்த ‘சங்கரன்’ என்னும் பெயரையுடையவனும், தன்னை நினையாதவரது அரண்களை முன்பு தீக்கு இரையாக்கிய, பொன் போலும் நிறத்தை யுடையவனும் ஆகிய