பக்கம் எண் :

523
 
110. மிக்கிறை யேயவன் துன்மதி யாலிட
நக்கிறை யேவிர லாலிற வூன்றி
நெக்கிறை யேநினை வார்தனி நெஞ்சம்
புக்குறை வான்உறை பூவணம் ஈதோ!

7

* * * * * * * *

8,9

111. சீரின் மிகப்பொலி யுந்திருப் பூவணம்
ஆர விருப்பிட மாவுறை வான்றனை


இறைவன் எழுந்தருளியுள்ள ‘திருப்பூவணம்’ என்னும் திருத்தலம் இதுதானோ?

கு-ரை: ‘இன்பத்தைச் செய்பவன்’ என்னும் பொருளதாகிய, ‘சங்கரன்’ என்பது, இம்மை இன்பத்தை யருளுதலையும் குறிக்குமாதலின், உயிர்கட்குப் போகம் அமைதற் பொருட்டுக்கொண்ட மாதொரு கூறாம் வடிவத்தைக் கூறுங்கால், ‘சங்கரன்’ என்று அருளினார். ‘சங்கரனாதல், தன்னைச் சார்ந்தார்க்கே’ என்று அருளுவார், பகைவர் புரத்தை எரியூட்டினமையை உடன் அருளிச் செய்தார்.

7. பொ-ரை: தனது தலைமையை எல்லை கடந்து மதித்தவனாகிய இராவணனது தீய எண்ணங் காரணமாக, வெகுளி நகை செய்து, தனது இடமாகிய கயிலையை, அவன் நெரியுமாறு, விரலால் சிறிதே ஊன்றி, தன்னையே உருகி நினைவாரது ஒப்பற்ற நெஞ்சிலே குடிபுகுந்து, ஒருஞான்றும் நீங்காது உறையும் இறைவன் எழுந்தருளியுள்ள, ‘திருப்பூவணம்’ என்னும் திருத்தலம் இதுதானோ?

கு-ரை: ஏய்தல் - பொருந்துதல்; அது பொருந்தியுள்ளதாக நினைத்தலைக் குறித்தது. ‘‘ஏய் அவன்’’ என்றது, இறந்த கால வினைத்தொகை. ‘ஊன்றி’ என்னும் எச்சம், எண்ணுப் பொருளது.

8,9. * * * * * * * * 

10. பொ-ரை: அழகினால் மிகப் பொலிகின்ற, ‘திருப்பூவணம்’ என்னும் திருத்தலத்தில், விருப்பம் மிக இடமாகக் கொண்டு எழுந்தருளியிருக்கும் இறைவனை, நம்பியாரூரன் பாடிய இச்சொல் மாலைகள் பத்தினையும் இந்நிலவுலகில் பாடுபவர், தம் பாவத்தை அறுப்பவராவர்.