பக்கம் எண் :

524
 
ஊரன் உரைத்தசொன் மாலைகள் பத்திவை
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே. 

10

திருச்சிற்றம்பலம்


கு-ரை: ‘விருப்பு ஆர’ என மாற்றி உரைக்க. ‘இருப்பிடமாக’ எனப் பிரிப் பாரும் உளர். ‘‘பாரில்’’ என்றது, ‘மக்கட் பிறப்பை எடுத்த தன் பயனாக‘ என்னும் கருத்துடையது.

இத்திருப்பதிகத்துள் எட்டுத் திருப்பாடல்களே கிடைத்துள்ளன. யாழ்ப்பாணத்து வண்ணைச் சுவாமிநாத பண்டிதர், ‘‘இத்திருப்பதிகத்தில் இரண்டாவது செய்யுள் நாலாவதாகவும், மூன்றாவது இரண்டாவதாகவும், நாலாவது மூன்றாவதாகவும் சில பிரதிகளிற் காணப்படுகின்றன’’ என்பர்.

கழறிற்றறிவார் புராணம்

நீடுதிருப் பூவணத்துக் கணித்தாக நேர் செல்ல
மாடுவரும் திருத்தொண்டர் மன்னியஅப் பதிகாட்டத்
தேடுமறைக் கரியாரைத் திருவுடையார் என்றெடுத்துப்
பாடிசையிற் பூவணமீ தோவென்று பணிந்தணைவார்.

சென்றுதிருப் பூவணத்துத் தேவர்பிரான் மகிழ்கோயில்
மூன்றில்வலங் கொண்டிறைவர் முன்வீழ்ந்து பணிந்தெழுந்து
நின்றுபர விப்பாடி நேர்நீங்கி யுடன்பணிந்து
வென்றிமுடி வேந்தருடன் போந்தங்கண் மேவினார்.

-தி.12 சேக்கிழார்