| 12. திருநாட்டுத்தொகை பதிக வரலாறு:
  வன்றொண்டர் திருவாரூரில் தங்கியிருந்த நாள்களில் பல தலங்களையும் நினைந்து பாடியருளியதாதல் வேண்டும் இத்திருப் பதிகம். குறிப்பு: இஃது, இறைவன் எழுந்தருளியுள்ள தலங்களைத் தொகுத்தருளிச் செய்தது. அவ்வாறருளிச் செய்யுமிடத்து, நாட்டின் தலைமையைப் பெற்ற தலங்கள், இவை என்பதனை அந்நாட்டினைக் குறிக்கு முகத்தால் விதந்தோதி அருளினமையின் இது, ‘திருநாட்டுத் தொகை’ என்னுந் திருப்பெயர் பெற்றது; எனவே, இது தலைமையாற் பெற்ற பெயராயிற்று.
 பண்: இந்தளம் பதிக எண்: 12 திருச்சிற்றம்பலம்
 | 112. | வீழக் காலனைக் கால்கொடு |  |  |  பாய்ந்த விலங்கலான் |  |  | கூழை ஏறுகந் தான்இடங் |  |  |  கொண்டது கோவலூர் |  |  | தாழை யூர்தகட் டூர்தக்க |  |  |  ளூர்தரு மபுரம் |  |  | வாழை காய்க்கும் வளர்மரு |  |  |  கன்னாட்டு மருகலே.  |  |  |  1 | 
 
 
  1. பொ-ரை: கூற்றுவனை, அவன் உயிரற்று விழுமாறு, காலால் உதைத்த கயிலாய நாதனும், நடை நிரம்பாத எருதினை ஏறுதலை விரும்பியவனுமாகிய இறைவன் தனக்கு இடமாகக்கொண்ட ஊர், ‘திருக்கோவலூர், தாழையூர், தகட்டூர், தக்களூர், தருமபுரம், வாழைகள் காய்க்கின்ற, செல்வம் வளர்கின்ற மருகல் நாட்டில் உள்ள மருகல்’ என்பவை. கு-ரை: தாழையூர், தகட்டூர், தக்களூர் இவை வைப்புத் தலங்கள். எல்லாத் தலங்களுடனும், ‘திரு’ என்பதனை இயைக்க. வைப்புத்தலங்கள் அல்லாதவை இன்ன நாட்டில் உள்ளன என்பதனை  |