113. | அண்டத் தண்டத்தின் அப்புறத் | | தாடும் அமுதன்ஊர் | | தண்டந் தோட்டந்தண் டங்குறை | | தண்டலை யாலங்காடு | | கண்டல் முண்டல்கள் சூழ்கழிப் | | பாலை கடற்கரை | | கொண்டல் நாட்டுக்கொண் டல்குறுக் | | கைநாட்டுக் குறுக்கையே. | | 2 |
114. | மூல னூர்முத லாயமுக் கண்ணன் | | முதல்வன்ஊர் | | நால னூர்நரை ஏறுகந் தேறிய | | நம்பன்ஊர் |
ஆறாந்திருமுறைக் குறிப்பிற் காண்க. ‘மருகல்’ என்னும் ஊரைத் தலைமையாகக் கொண்ட நாடு, மருகல் நாடு. பிறவும் இவ்வாறே உணர்க. இந்நாடுகள் சோழமண்டலம் முதலிய மண்டலங்களாகிய பெருநாடுகளின் உட்பகுதிகள் என்க. ‘கொண்டது’ என்பதனைத் தனித்தனி கூட்டி உரைக்க. ‘கொண்டதும்’ என உம்மையோடு கூடிய பாடமே காணப்படுகின்றது. ‘தகடூர்’ என்பதும் பாடம். 2. பொ-ரை: இவ்வண்டத்திற்கு அப்பால் உள்ள அண்டங்களுக்கும் அப்பால் நின்று நடனம் ஆடுகின்ற அமுதமாய் உள்ள இறைவனது தலங்கள், ‘தண்டந்தோட்டம், தண்டங்குறை, தண்டலை, ஆலங்காடு, கடல் முள்ளியும் தாழையும் சூழ்ந்த கழிப்பாலை, கடற்கரை, கொண்டல் நாட்டிலுள்ள கொண்டல், குறுக்கை நாட்டிலுள்ள குறுக்கை’ என்பவை. கு-ரை: ‘அப்புறத்து’ என்றது முதற்கண் உள்ள, ‘அண்டத்து’ என்பதனோடும் இயையும். அப்புறத்து அண்டத்தை, ‘பகிரண்டம்’ என்ப. தண்டந்தோட்டம், தண்டங்குறை, கொண்டல் இவை வைப்புத்தலங்கள். ‘கடற்கரை’ என்றது, கோடிக்குழகர், ஒற்றியூர் போல்வனவற்றை. 3. பொ-ரை: அழகிய திருநீற்றை அணிந்த, வெள்விடையை விரும்பியேறின, முக்கண் முதல்வனது தலங்கள், ‘மூலனூர், முதல்வனூர், நாலனூர், குற்றாலம், குரங்கணின்முட்டம், வேலனூர், வெற்றியூர், வெண்ணிக் கூற்றத்திலுள்ள வெண்ணி’ என்பவை.
|