பக்கம் எண் :

527
 
கோல நீற்றன்குற் றாலங்

குரங்கணின் முட்டமும்

வேல னூர்வெற்றி யூர்வெண்ணிக்

கூற்றத்து வெண்ணியே. 

3


115.தேங்கூ ருந்திருச் சிற்றம் பலமுஞ்

சிராப்பள்ளி

பாங்கூ ரெங்கள் பிரானுறை

யுங்கடம் பந்துறை

பூங்கூ ரும்பர மன்பரஞ் சோதி

பயிலும்ஊர்

நாங்கூர் நாட்டுநாங் கூர்நறை

யூர்நாட்டு நறையூரே. 

4

116.குழலை வென்ற மொழிமட

வாளைஓர் கூறனாம்

மழலை யேற்று மணாளன்

இடம்தட மால்வரைக்



கு-ரை: ‘ஊர்’ எனப்பட்டவை ஐந்தும் வைப்புத்தலங்கள்.

4. பொ-ரை: எமக்குத் துணையாய் வரும் தலைவனும், எப்பொருட்கும் மேலானவனும், எல்லா ஒளிகட்கும் மேலான ஒளியாய் உள்ளவனும் ஆகிய இறைவன் நீங்காது வாழும் அழகு மிகுந்த ஊர்கள், ‘தேங்கூர், சிற்றம்பலம், சிராப்பள்ளி, அழகு மிக்க கடம்பந்துறை, நாங்கூர் நாட்டிலுள்ள நாங்கூர், நறையூர் நாட்டிலுள்ள நறையூர்’ என்பவை.

கு-ரை: ‘எங்கள் பாங்கு ஊர் பிரான் உறையும், பரமன் பரஞ்சோதி பயிலும் பூங்கூரும் ஊர்‘ என எடுத்துக்கொண்டு உரைக்க. ‘பூக்கூர்’ என்பது மெலித்தலாயிற்று. தேங்கூரும், நாங்கூரும் வைப்புத் தலங்கள். ‘தெங்கூர்’ என்பது நீண்டு நின்றதாகக் கருதுவாரும் உளர்.

5. பொ-ரை: குழலிசையை வென்ற மொழியினையுடைய உமாதேவியை ஒரு பங்கில் உடையவனாகிய, இளமையான