பக்கம் எண் :

528
 
கிழவன் கீழை வழிபழை

யாறு கிழையமும்

மிழலை நாட்டு மிழலைவெண்

ணிந்நாட்டு மிழலையே. 

5

117.தென்னூர் கைம்மைத் திருச்சுழி

யற்றிருக் கானப்பேர்

பன்னூர் புக்குறை யும்பர

மற்கிடம் பாய்நலம்

என்னூர் எங்கள்பி ரான்உறை

யுந்திருத் தேவனூர்

பொன்னூர் நாட்டுப்பொன் னூர்புரி

சைநாட்டுப் புரிசையே. 

6



இடபத்தையுடைய அழகனும், பெரிய கயிலாய மலைக்கு உரியவனும் ஆகிய இறைவனது தலங்கள், ‘கீழைவழி, பழையாறு, கிழையம், மிழலை நாட்டிலுள்ள மிழலை, வெண்ணி நாட்டிலுள்ள மிழலை’ என்பவை.

கு-ரை: மிழலை நாட்டு மிழலை வீழிமிழலை. வெண்ணிநாட்டு மிழலை வைப்புத் தலமாதல் வேண்டும்.‘கீழைவழி’ முதலிய மூன்றும் வைப்புத் தலங்கள்.

6. பொ-ரை: சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற தலங்களிலே எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு இடமாய், பரவிய புகழையுடையன எவ்வூர்கள் எனின், அவை, எங்கள் பெருமான் எழுந்தருளியுள்ள, ‘தென்னூர், ஒழுக்கம் நிறைந்த சுழியல், கானப்பேர், தேவனூர், பொன்னூர் நாட்டிலுள்ள பொன்னூர், புரிசை நாட்டிலுள்ள புரிசை’ என்பவை.

கு-ரை: தென்னூர், தேவனூர், பொன்னூர், புரிசை இவை வைப்புத்தலங்கள்.

‘எனின், அவை’ என்பன சொல்லெச்சங்கள்.