120. | தழலு மேனியன் தையலொர் பாகம் | | அமர்ந்தவன் | | தொழலுந் தொல்வினை தீர்க்கின்ற | | சோதிசோற் றுத்துறை | | கழலுங் கோவை யுடையவன் | | காதலிக் கும்மிடம் | | பழனம் பாம்பணி பாம்புரந் | | தஞ்சைதஞ் சாக்கையே. | | 9 |
121. | மைகொள் கண்டன்எண் டோளன்முக் | | கண்ணன் வலஞ்சுழி | | பைகொள் வாளர வாட்டித் | | திரியும் பரமனூர் | | செய்யில் வாளைகள் பாய்ந்துக | | ளுந்திருப் புன்கூர்நன் | | றையன் மேய பொழில் அணி | | ஆவடு துறையதே. | | 10 |
9. பொ-ரை: தழல் போல ஒளிவிடும் திருமேனியை உடையவனும், மங்கையை ஒரு பங்கில் விரும்பிவைத்துள்ளவனும், தன்னைத் தொழுதவுடன் தொழுதவரது பழவினையை அறுக்கின்ற ஒளியாய் உள்ளவனும், கழல் அணிந்த மணிவடத்தை உடையவனும், ஆகிய இறைவன் விரும்புகின்ற தலங்கள், ‘சோற்றுத்துறை, பழனம், பாம்பணி, பாம்புரம், தஞ்சை, தஞ்சாக்கை’ என்பவை. கு-ரை: பாம்பணி, தஞ்சை, தஞ்சாக்கை இவை வைப்புத் தலங்கள். ‘பாம்புணி’ என்பதும் பாடம். 10. பொ-ரை: கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையும்,. எட்டுத் தோள்களையும், மூன்று கண்களையும் உடையவனும், படத்தைக்கொண்ட கொடிய பாம்பை ஆட்டித் திரியும் மேலவனுமாகிய இறைவனுடைய தலங்கள், ‘வலஞ்சுழி, வயல்களில் வாளை மீன்கள் மேலெழுந்து பாய்ந்து பிறழ்கின்ற திருப்புன்கூர், அவன் மிக விரும்பிய, சோலையை உடைய அழகிய ஆவடுதுறை’ என்பவை.
|