122. | பேணி நாடத னிற்றிரி | | யும்பெரு மான்றனை | | ஆணை யாஅடி யார்கள் | | தொழப்படும் ஆதியை | | நாணிஊரன் வனப்பகை யப்பன்வன் | | றொண்டன்சொல் | | பாணி யால்இவை ஏத்துவார் | | சேர்பர லோகமே. | | 11 |
திருச்சிற்றம்பலம்
கு-ரை: ‘பொழிலை அணிந்த’ என்றும், ‘பொழில் அழகைச் செய்கின்ற’ என்றும் உரைப்பினுமாம். 11. பொ-ரை: நாடுகளில் எல்லாம் விரும்பித் திரியும் பெருமானும், அடியார்கள் தமக்குத் தலைவனாக அறிந்து தொழப்படுகின்ற முதல்வனும் ஆகிய இறைவனை, நாணுடையவளாகிய ‘வனப்பகை’ என்பவளுக்குத் தந்தையும், இறைவன்முன் வன்மை பேசிப் பின் அவனுக்குத் தொண்டன் ஆகியவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களைத் தாளத்தொடு பாடித் துதிப்பவர் அடையும் இடம் சிவலோகமேயாம். கு-ரை: ‘நாடது’ என ஒருமையாற் கூறியது, தொகை நிலையால் என்க. ‘ஆணை’ என்றது, அஃது உடையானைக் குறித்தது. ‘சேர்’ என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகுபெயராய், சேரப்படுமிடத்தைக் குறித்தது.
திருவிளையாடற் புராணம்
அரவகல் அல்குலார்பால் ஆசைநீத் தவர்க்கே வீடு தருவம்என் றளவில்வேதம் சாற்றிய தலைவன் தன்னைப் பரவைதன் புலவிதீர்ப்பான் கழுதுகண்படுக்கும் பானாள் இரவினில் தூதுகொண்டோன் இணையடி முடிமேல் வைப்பாம்.
-பரஞ்சோதிமுனிவர் |
|