பக்கம் எண் :

532
 

13. திருத்துறையூர்

பதிக வரலாறு:

இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பெற்ற சுந்தரர் திரு வெண்ணெய்நல்லூரையும் திருநாவலூரையும் தரிசித்துப் பாடிய பின்னர் திருத்துறையூரைத் தரிசித்துத் தமக்குத் தவநெறி வேண்டிப் பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 தடுத்தாட் கொண்ட. புரா. 79).

குறிப்பு: இத் திருப்பதிகம், இறைவனைத் தவநெறி தந்தருளுமாறு வேண்டி அருளிச்செய்தது.

பண்: தக்கராகம

பதிக எண்: 13

திருச்சிற்றம்பலம்

123.மலையாரரு வித்திரள்

மாமணி யுந்திக்

குரையாரக்கொணர்ந் தெற்றிஓர்

பெண்ணை வடபால்

கலையார் அல்குற் கன்னியர்

ஆடுந் துறையூர்த்

தலைவாஉனை வேண்டிக்கொள்

வேன்தவ நெறியே. 

1



1. பொ-ரை: மலையிற் பொருந்திய அருவிக் கூட்டம், பெரிய மணிகளைத் தள்ளிக் கொணர்ந்து கரை நிறைய எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணை யாற்றின் வடகரைக்கண், நல்லஆடையை அணிந்த அல்குலையுடைய கன்னிப்பெண்கள் மூழ்கி விளையாடும் ஒரு துறையைச் சார்ந்த ஊராகிய திருத்துறையூரின்கண் எழுந்தருளியுள்ள தலைவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.

கு-ரை: ‘வேறொன்றையும் வேண்டேன்’ என்பது, பிரிநிலை எச்சம், குலை - கரை, துறையூர் என்றதன் காரணம் விரிப்பார், பலவிடத்து இவ்வாறு ஓதினார். ‘எற்றி’ என்றது, ‘எற்றுதலையுடையது’