பக்கம் எண் :

533
 
124.மத்தம்மத யானையின்
வெண்மருப் புந்தி
முத்தங்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
பத்தர்பயின் றேத்திப்
பரவுந் துறையூர்
அத்தாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே. 

2

125.கந்தங்கமழ் காரகில்

சந்தன முந்திச்

செந்தண்புனல் வந்திழி

பெண்ணை வடபால்



என்னும் பொருளது. அன்றி, எற்றிய என்பதன் அகரந்தொகுத்தலாயிற்று எனலுமாம். இது, மேல் இவ்வாறு வருவனவற்றிற்கும் ஒக்கும். இளமகளிர்தாமும் நீராட்டு நெறியிற் பிறழாமையுணர்த்துவார். ‘கலை யாரல்குற் கன்னியர்’ என்று அருளிச் செய்தார். அதனால், இது, பின்னர்க் கூறப்படும் மகளிர்க்கும் பொருந்துவதாயிற்று. ‘உன்னை’ என்றது, வேற்றுமை மயக்கம். ‘கொள்’ என்பது, தற்பொருட்டுப் பொருண்மை விகுதி.

2. பொ-ரை: மயக்கங்கொண்ட மதயானைகளின் கொம்புகளைத் தள்ளிக்கொண்டுவந்து அவற்றில் உள்ள முத்துக்களைக் கரையில் எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் உள்ள, அடியவர் பலகாலும் வந்து ஏத்தி வழிபடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தந்தையே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.

கு-ரை: மத்தம், உன்மத்தம். இது மதத்தால் ஆயது. மதம், மதநீர்.

3. பொ-ரை: நறுமணம் கமழ்கின்ற கரிய அகில்மரங்களையும் சந்தன மரங்களையும் தள்ளிக்கொண்டு, சிவந்த குளிர்ந்த நீர் இடையறாது வந்து பாய்கின்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண்ணுள்ள, பெண் குரங்குகள் பல வகையான நடனங்களை ஆடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள எம்தந்தையே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.