| |  | மந்தீபல மாநடம் |  |  | ஆடுந் துறையூர் |  |  | எந்தாய் உனை வேண்டிக்கொள் |  |  | வேன்தவ நெறியே. |  |  | 3 | 
 | 126. | அரும்பார்ந்தன மல்லிகை |  |  |  சண்பகஞ் சாடிச் |  |  | சுரும்பாரக்கொணர்ந் தெற்றிஓர் |  |  |  பெண்ணை வடபால் |  |  | கரும்பார்மொழிக் கன்னியர் |  |  |  ஆடுந் துறையூர் |  |  | விரும்பாஉனை வேண்டிக்கொள் |  |  |  வேன்தவ நெறியே.  |  |  | 4 | 
 
 | 127. | பாடார்ந்தன மாவும் |  |  |  பலாக்களுஞ் சாடி |  |  | நாடாரவந் தெற்றிஓர் |  |  |  பெண்ணை வடபால் | 
 
 
  கு-ரை: நீர்க்குச் செந்நிறம் நிலத்தியல்பால் ஆயிற்று என்க. ‘ஆடல் மகளிர் போல ஆடும்’ என்பார், ‘மந்தி ஆடும்’ என்று அருளிச் செய்தார். 4. பொ-ரை: அரும்புகள் நிறைந்தனவாகிய ‘மல்லிகை, சண்பகம்’ என்னும் மரங்களை முரித்து, அவற்றில் உள்ள வண்டுகள் நிறையக்கிடக்கக் கொணர்ந்து கரையில் எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணை யாற்றின் வடகரைக்கண், கரும்புபோலும் மொழியினை யுடைய கன்னிப் பெண்கள் மூழ்கி விளையாடும் ஒருதுறையைச் சார்ந்த திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள என் விருப்பத்திற்குரியவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன். கு-ரை: ‘மல்லிகை’ என்றது மரமல்லிகையை, முரிக்கப்படுவது அதுவே யாகலின், ‘நம்பன்’ என்பதனை, ‘விரும்பன்’ என்றருளினார். 5. பொ-ரை: பக்கங்களில் நிறைந்துள்ளனவாகிய மாமரங்களையும், பலா மரங்களையும் முரித்துக்கொணர்ந்து நாடெங்கும்  |