| மாடார்ந்தன மாளிகை | | சூழுந் துறையூர் | | வேடாஉனை வேண்டிக்கொள் | | வேன்தவ நெறியே. | | 5 |
128 | மட்டார்மலர்க் கொன்றையும் | | வன்னியுஞ் சாடி | | மொட்டாரக்கொணர்ந் தெற்றிஓர் | | பெண்ணை வடபால் | | கொட்டாட்டொடு பாட்டொலி | | ஓவாத் துறையூர்ச் | | சிட்டாஉனை வேண்டிக்கொள் | | வேன்தவ நெறியே. | | 6 |
நிறையும் படி எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக் கண் உள்ள, செல்வம் நிறைந்தனவாகிய மாளிகைகள் சூழ்ந்த துறையூரில் எழுந்தருளியுள்ள, பல அருட்கோலங்களை யுடையவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன். கு-ரை: காலத்தை யுடையவனை, ‘காலன்’ என்றல்போல, வேடத்தை யுடைவனை, ‘வேடன்’ என்று அருளினார். 6. பொ-ரை: தேன் நிறைந்த மலர்களை யுடையகொன்றை மரம், வன்னி மரம் இவைகளை முரித்து, அரும்புகளோடு நிரம்பக் கொணர்ந்து எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக் கண், வாச்சிய முழக்கமும், ஆடலும், பாடலும் நீங்காது கொண்டு விளங்குகின்ற திருத் துறையூரில் எழுந்தருளியுள்ள மேலானவனே உன்பால் அடியேன் தவ நெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன். கு-ரை: ‘கொட்டு’ என்னும் முதனிலைத் தொழிற்பெயர், அதன் காரியமாகிய ஓசையின் மேல் நின்றது.
|