129. | மாதார்மயிற் பீலியும் | | வெண்ணுரை யுந்தித் | | தாதாரக்கொணர்ந் தெற்றிஓர் | | பெண்ணை வடபால் | | போதார்ந்தன பொய்கைகள் | | சூழுந் துறையூர் | | நாதாஉனை வேண்டிக்கொள் | | வேன்தவ நெறியே. | | 7 |
130. | கொய்யார்மலர்க் கோங்கொடு | | வேங்கையுஞ் சாடிச் | | செய்யாரக்கொணர்ந் தெற்றிஓர் | | பெண்ணை வடபால் | | மையார்தடங் கண்ணியர் | | ஆடுந் துறையூர் | | ஐயாஉனை வேண்டிக்கொள் | | வேன்தவ நெறியே. | | 8 |
7. பொ-ரை: அழகு நிறைந்தனவான மயிற்பீலியையும், வெள்ளிய நுரைகளையும் தள்ளி, பல மலர்களை மகரந்தத்தோடு நிரம்பக் கொணர்ந்து எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண், மலர்கள் நிறைந்தனவாகிய பொய்கைகள் சூழப் பெற்று விளங்கும் திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தலைவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன். கு-ரை: ‘மாது ஆர்’ என்றதற்கு, ‘விருப்பம் நிரம்ப உண்டாதற்கு உரிய’ என்று உரைத்தலும் ஆம். 8. பொ-ரை: கொய்தல் பொருந்திய மலரையுடைய கோங்க மரம், வேங்கை மரம் இவைகளை முரித்துக்கொணர்ந்து, வயல் நிறைய எறிவதாகிய, ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண், மை பொருந்திய கண்களையுடைய மகளிர் மூழ்கியாடும் ஒரு துறைக்கண் உள்ள திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தலைவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
|