பக்கம் எண் :

537
 
131.விண்ணார்ந்தன மேகங்கள்

நின்று பொழிய

மண்ணாரக்கொணர்ந் தெற்றிஓர்

பெண்ணை வடபால்

பண்ணார்மொழிப் பாவையர்

ஆடுந் துறையூர்

அண்ணாஉனை வேண்டிக்கொள்

வேன்தவ நெறியே. 

9

132.மாவாய்ப்பிளந் தானும்

மலர்மிசை யானும்

ஆவாஅவர் தேடித்

திரிந்தல மந்தார்

பூவார்ந்தன பொய்கைகள்

சூழுந் துறையூர்த்

தேவாஉனை வேண்டிக்கொள்

வேன்தவ நெறியே. 

10



கு-ரை: ‘கொய்யா மலர்’ எனவும் பாடம் ஓதுவர்.

9. பொ-ரை: வானத்தில் நிறைந்தனவாகிய மேகங்கள் நிலைத்து நின்று பொழிவதனால், மலைக்கண் உள்ள பொருள்களை வாரிக் கொணர்ந்து நிலம் நிறைய எறிவதாகிய, ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண், பண்போலும் மொழியினையுடைய மகளிர் மூழ்கியாடும் ஒரு துறைக்கண் உள்ள திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தலைவனே, உன்போல் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.

கு-ரை: மேகம் நின்று பொழிதல் மலையிடத்தாகலின், அந்நீரால் கொணரப்படுவன மலைபடு பொருள்களாயின. அதனைச் சொல்லெச்சமாக வருவிக்க. ‘அண்ணல்’ என்பதன் விளியாகிய ‘அண்ணால்’ என்பது, ‘அண்ணா’ என மருவிற்று.

10. பொ-ரை: பூக்கள் நிறைந்தனவாகிய பொய்கைகள் சூழ்ந்துள்ள திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள பெருமானே. ‘கேசி’