பக்கம் எண் :

538
 
133.செய்யார்கம லம்மலர்

நாவலூர் மன்னன்

கையால்தொழு தேத்தப்

படுந்துறை யூர்மேல்

பொய்யாத்தமிழ் ஊரன்

உரைத்தன வல்லார்

மெய்யேபெறு வார்கள்

தவநெறி தானே. 

11

திருச்சிற்றம்பலம்


என்னும் அசுரன் கொண்ட வஞ்சனை உருவமாகிய குதிரையின் வாயைக் கிழித்த திருமாலும், மலர்மிசையோனாகிய பிரமனும் ஆகிய அவ்விருவரும் உன்னை வழிபட்டுத் தவநெறியை வேண்டிக் கொள்ள மாட்டாது, அந்தோ! உன் அளவினை ஆராய்ந்து தேடியலைந்தனர்; ஆயினும், உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.

கு-ரை: ‘அலமந்தார்’ என்பதன் பின், ‘ஆயினும்’ என்பது எஞ்சி நின்றது. ‘தவநெறியை உன்பால் வேண்டிக் கொள்ளுந் தவமுடை யனாயினேன்’ என்னும் மகிழ்ச்சி மீதூர்வால், காரணக் கடவுளரும், அது பெற்றிலாமையை எடுத்தோதியருளினார். ‘அவர்’ என்றது, உம்மை யெண்ணின் தொகைப் பொருட்டாய் நின்றது. "மாவாய் பிளந்துகந்த மாலும்" (தி. 6 ப. 82 பா.6) என, அப்பர் சுவாமிகளும் மாவாய் பிளந்தமையை அருளினமை காண்க.

11. பொ-ரை: வயல்கள் நிறையத் தாமரை மலரும் திருநாவலூருக்குத் தலைவனும், மெய்ம்மையையே கூறும் தமிழ்ப் பாடலைப் பாடுபவனும் ஆகிய நம்பியாரூரன், யாவராலும் கையால் கும்பிட்டுத் துதிக்கப்படும் திருத்துறையூரில் உள்ள இறைவன் மீது பாடியனவாகிய இப் பாடல்களை நன்கு பாடவல்லவர் தவநெறியைத் தப்பாது பெறுவர்.

கு-ரை: ‘ஆர்’ என்னும் முதனிலை, ‘ஆர’ என வினையெச்சப் பொருள் பயந்தது. ‘செய்தக்கவல்ல செயக்கெடும்’ என்பதிற் போல (குறள் - 466.).