பக்கம் எண் :

548
 

கு-ரை: ‘ஏசுதல் மனத்தொடு படாதது; இகழ்தல் மனத்தொடு பட்டது’ என்க. "பித்தரே ஒத்தொர் நச்சிலராகில், பின்னையே அடியார்க் கருள்செய்வதாகில், பெற்றபோ துகந்து பெறாவிடி லிகழில்" என்றற் றொடக்கத்தன இகழ்ந்தனபோல நின்றமையின், ‘ஏசினவல்ல இகழ்ந்தனவல்ல’ என்று தெரித்தோதியருளினார். இவ்விறுதித் திருப்பாடல் முடியும் பொழுதும், இறைவர் அருள் பண்ணாமையின் இதனைத் திருக்கடைக் காப்பாக ஓதாது, ‘பொறுத்திலராயின் இவரலாதில்லையோ பிரானார்’ என முன்னைத் திருப்பாடல்கள் போலவே ஓதியருளினார். எனினும், இது முடிந்தவுடன் இறைவர் நிரம்பத் திருவருள் செய்தமையால், இதனைப் பாடுபவரும் அப் பயன் பெறுதல், அத் தொடரிலே அமைந்து கிடந்தது என்க. இக் கருத்தானே இத் திருப்பாடலைச் சேக்கிழார் ‘திருக்கடைக் காப்பு’ (தி. 12 ஏ. கோ. பு. 82,) என்று குறித்தருளினார்.

ஏயர்கோன் கலிக்காமர் புராணம்

  

நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி

நிலத்திடைப் புலம்கெழும் பிறப்பால்

உய்த்தகா ரணத்தை உணர்ந்துநொந் தடிமை

யொருமையாம் எழுமையும் உணர்த்தி

எத்தனை யருளா தொழியினும் பிரானார்

இவரலா தில்லையோ யென்பார்

வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும் 

எனவழுத் தினர்வழித் தொண்டர். 

81

இவ்வகை பரவித் திருக்கடைக் காப்பும்

ஏசின அல்லவென் றிசைப்ப

மெய்வகை விரும்பு தம்பெரு மானார்

விழுநிதிக் குவையளித் தருள

மைவளர் கண்டர் கருணையே பரவி

வணங்கியப் பதியிடை வைகி

எவ்வகை மருங்கும் இறைவர்தம் பதிகள்

இறைஞ்சியங் கிருந்தனர் சிலநாள். 

82

-தி. 12 சேக்கிழார்