பக்கம் எண் :

549
 

15. திருநாட்டியத்தான்குடி

பதிக வரலாறு:

சுந்தரர் திருவாரூரில் புற்றிடங்கொண்ட பெருமானை வழிபட்டு வீற்றிருக்கும் நாள்களில் கோட்புலியாரின் வேண்டுகோட்கிணங்கிப் பல பதிகளையும் வணங்கிக்கொண்டு திருநாட்டியத்தான்குடிக்கு எழுந்தருளினார். கோட்புலியார் சுந்தரரை வரவேற்று உபசரித்து வழிபட்டுத் தம் புதல்வியாராகிய சிங்கடியார், வனப்பகையார் என்னும் இருவரையும் வணங்கச் செய்து, "அடியேன் பெற்ற மக்கள் இவர், இவர்களை அடிமையாகக் கொண்டருள வேண்டும்" என்று பணிய, நம்பியாரூரர், இவர் எனக்குத் தூயமக்கள்’ என்று ஏற்றுக்கொண்டு இறைவரைத் தரிசித்து, கோட்புலியாரைச் சிறப்பித்து, தம்மைச் சிங்கடியப்பன் என்று கூறிப் பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர் கோன். புரா. 33 - 42)

குறிப்பு: இத் திருப்பதிகம், சுவாமிகள் தாம் எவ்வாற்றானும் இறைவனைப் பிரியாது வணங்கப் பெறும் பேற்றைப் பெற்ற மகிழ்ச்சி மீதூர் வால், தமது திருத்தொண்டின் வன்மையை விரித்தருளிச் செய்தது. இத் திருப்பதிகத்துள் இறைவனைக் குறித்து வரும் பன்மைச் சொற்பாடங்களெல்லாம், அறியாதார் ஒருமைச் சொற்களை அங்ஙனம் திரித்தோதிய பாடங்களாதல் அறிந்து கொள்க.

பண்: தக்கராகம்

பதிக எண்: 15

திருச்சிற்றம்பலம்

146.

பூணாண் ஆவதொ ரரவங்கண் டஞ்சேன்

புறங்காட் டாடல்கண் டிகழேன்

பேணா யாகிலும் பெருமையை உணர்வேன்

பிறவே னாகிலும் மறவேன்



1. பொ-ரை: திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே. உனக்கு அணிகலமும், அரைநாணும் சிறுமையையுடைய பாம்பாதல் கண்டு அஞ்சேன்; நீ புறங்காட்டில் ஆடுதலைக் கண்டு இகழேன்; நீ எனது சிறுமையை யுணர்ந்து என்னை விரும்பாதொழியினும், யான் உனது பெருமையை உணர்ந்து உன்னை விரும்புவேன்;