பக்கம் எண் :

550
 
காணா யாகிலுங் காண்பன்என் மனத்தால்

கருதா யாகிலுங் கருதி

நானேல் உன்னடி பாடுத லொழியேன்

நாட்டியத் தான்குடி நம்பீ.

1

147.கச்சேர் பாம்பொன்று கட்டிநின் றிடுகாட்

டெல்லியி லாடலைக் கவர்வன்

துச்சேன் என்மனம் புகுந்திருக் கின்றமை

சொல்லாய் திப்பிய மூர்த்தீ

வைச்சே இடர்களைக் களைந்திட வல்ல

மணியே மாணிக்க வண்ணா

நச்சேன் ஒருவரை நான்உனை யல்லால்

நாட்டியத் தான்குடி நம்பீ. 

2



வேறோராற்றால் நான் பிறவி நீங்குவேனாயினும், உன்னை மறவேன்; நீ என்னைக் கடைக்கணியாதொழியினும், உன்னை கண்ணாரக் காண்பேன்; நீ என்னை உன் திருவுள்ளத்தில் நினைந்து ஏதும் அருள் பண்ணாதொழியினும், நானோ, என் மனத்தால் உன்னை நினைந்து பாடுதலை ஒழியமாட்டேன், இஃது என் அன்பிருந்தவாறு.

கு-ரை: ‘இஃது என் அன்பிருந்தவாறு’ என்பது குறிப்பெச்சம். சிறந்தவனை ‘நம்பி’ என்றல் மரபு. ‘ஆகிலும்’ என வந்த உம்மைகள், அவை நிகழாமையை உணர்த்தலின், எதிர்மறை.

2. பொ-ரை: உண்மையான தெய்வத் திருமேனியை உடையவனே, துன்பங்களை உளவாக்கவும் களையவும் வல்ல உயர்வுடையவனே, மாணிக்கம் போலும் நிறத்தை உடையவனே, திரு நாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, நான் உன்னையன்றி வேறொருவரையும் விரும்பேன்; உயர எழுகின்ற பாம்பு ஒன்றைக் கச்சாகக் கட்டி நின்று இடுகாட்டில் இரவில் ஆடுகின்ற உன் கோலத்தையே மனத்தில் விரும்பியிருத்துவேன்; இழிபுடையேனாகிய என் மனத்தில் நீ இவ்வாறு புகுந்து நிற்றற்குரிய காரணத்தைச்சொல்லியருளாய்!

கு-ரை: ‘மனம் புகுந்திருக்கின்றமை சொல்லாய்’ என்றதும், ‘என் அன்பிருந்தவாறு’ என்றதேயாம். உயர எழுதல், படம் எடுத்தல். ‘துச்சனேன்’ என்பது, குறைந்து நின்றது, ‘இடர்கள், என்றது பிறவித்