பக்கம் எண் :

551
 
148.அஞ்சா தேஉனக் காட்செய வல்லேன்

யாதினுக் காசைப் படுகேன்

பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை

பங்கா எம்பர மேட்டீ

மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த

மணியே மாணிக்க வண்ணா

நஞ்சேர் கண்டா வெண்டலை யேந்தீ

நாட்டியத் தான்குடி நம்பீ. 

3

149.கல்லே னல்லேன் நின்புகழ் அடிமை

கல்லா தேபல கற்றேன்

நில்லே னல்லேன் நின்வழி நின்றார்

தம்முடை நீதியை நினைய



துன்பங்களை. பந்தமும் வீடும் இறைவனே யாதல் திருமுறைகளுட் பல’ விடத்துங் காணப்படும். ‘மணி’ என்றது உயர்வு குறித்து வந்த உவமையாகு பெயர்.

3. பொ-ரை: பஞ்சு ஊட்டிய அழகிய மெல்லிய பாதங்களையுடைய, பெரிய மலைக்கு மகளாகிய உமையை ஒருபாகத்தில் உடையவனே, மேலான இடத்தில் உள்ள, எங்கள் பெருமானே, மேகங்களின் மேற் செல்லுகின்ற வெள்ளிய திங்களைச் செவ்விய சடையின் கண் வைத்த உயர்வுடையவனே, மாணிக்கம் போலும் நிறத்தை யுடையவனே, நஞ்சு தோன்றுகின்ற கண்டத்தையுடையவனே, வெள்ளிய தலையை ஏந்தியவனே, திருநாட்டியத் தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, அஞ்சாமலே உனக்கு நான் தொண்டுபுரிய வல்லேன்; அதன் பயனாக எதற்கு ஆசைப்படுவேன்? ஒன்றிற்கும் ஆசைப்படேன்; இஃது என் அன்பிருந்தவாறு.

கு-ரை: ‘அஞ்சாதே’ என்னும் ஏகாரம், தேற்றம். அஞ்சுதற் காரணங்கள் உளவாகவும் அஞ்சாமலே என்பது பொருள். அக் காரணங்கள் இரண்டாவது திருப்பதிகத்துட் சொல்லப்பட்டன; இத் திருப்பதிகத்துள்ளும் சில காண்க.

4. பொ-ரை: திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, நான் உனது புகழைக் கல்லாதேனல்லேன்; அடிமைச் செயல்களைப் பிறரிடம் கல்லாமலே நீ உள்நின்று உணர்த்த அவை எல்லாவற்றையும் கற்றேன்; அங்ஙனங் கற்றதற்குத்தக நினது வழியில்