பக்கம் எண் :

55
 

ஐவரால் அலைக்கப்பட்டுக் கழியிடைத் தோணி போன்றேன்" (தி. 4 ப. 31 பா. 6) என்றாற் போலத் தமது நிலைமைக்கு இரங்கிருளுதலும் போல்வனவாகவே பெரும்பான்மையும் இருத்தலைக் காணலாம்.

இறைவனது திருவருளில் வைத்த உறுதிப்பாட்டினால், "அஞ்சுவது யாதொன்றும் இல்லை, (தி. 4 ப. 2 பா. 1) வானந்துளங்கிலென் மண்கம்பம் ஆகிலென், (தி. 4 ப. 112 பா. 8) நாமார்க்குங் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்றாற் போலும் வீரமொழிகள், "சிவன் எனும் ஓசையல்லது அறையோ" (தி. 4 ப. 8 பா. 1) என்றாற்போல அறை கூவுதல் இவை காணப்பெறுவதும், அவரது திருப்பதிகத்திலேதான்.

காயமே கோயி லாகக் கடிமனம் அடிமை யாக
வாய்மையே தூய்மை யாக மனமணி இலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா நிறையநீர் அமைய ஆட்டிப்
பூசனை ஈச னார்க்குப் போற்றவிக் காட்டி னோமே.

-தி. 4 ப. 76 பா. 4

பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை உள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்ட னாரே.

-தி. 4 ப. 31 பா. 4

உடம்பெனும் மனைய கத்துள் உள்ளமே தகளி யாக
மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனுந் திரி மயக்கி
இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே.

-தி. 4 ப. 75 பா. 4

அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூர்எம் பிரானையே.

-தி. 5 ப. 1 பா. 2