151. | படப்பாற் றன்மையில் நான்பட்ட தெல்லாம் | | படுத்தாய் என்றல்லல் பறையேன் | | குடப்பாச் சில்லுறை கோக்குளிர் வானே | | கோனே கூற்றுதைத் தானே | | மடப்பாற் றயிரொடு நெய்மகிழ்ந் தாடு | | மறையோ தீமங்கை பங்கா | | நடப்பா யாகிலும் நடப்பனுன் னடிக்கே | | நாட்டியத் தான்குடி நம்பீ. | | 6 |
நான் உனக்கு அடியவனாய், உன்னோடு ஒட்டியே நிற்பேன்; உன் திருவடியையே பற்றாக அடைந்த அடியார்க்கு அடியவனாகிய பெருமையை நான் பெற்றுடையேனாயினும், உன்னைப் பாடுதலை விடமாட்டேன்; உன் புகழைப் பாடியும், உனது பெருமைகளை ஆராய்ந்தும் யாவருமறிய உன்னொடு நட்புக் கொண்டேனாதலின் உன்னை நான் மறக்கமாட்டேன்; இஃது என் அன்பிருந்தவாறு. கு-ரை: "கணவனை" என்னும் ஐகாரம் முன்னிலையுணர்த்திற்று; அஃது உயர்திணைமேல் நின்றமையால், இரண்டாவதன் தொகைக்கண், ‘இயற்கை மருங்கின் மிகற்கை தோன்ற’ லாய் (தொல்: எழுத்து: 158.), ககரம் மிக்கது. இவ்வாறன்றி "கணவன்" என முன்னிலைக்கண் படர்க்கை வந்தது இடவழுவமைதி எனக் கொண்டு, ஐகாரத்தை உருபாக்கியே உரைத்தலுமாம். அடியார்க்கு அடியாரானார் அதன்மேல் ஒன்று பெறவேண்டுவது இன்மையின், ‘அதன்பின்னும் உன்னைப் பாடுதல் ஒழியேன்’ என்று அருளிச் செய்தார். "நாடி நட்பினல்லது - நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே" (நற்றிணை - 32.) என்பவாகலின், ‘உம்மை நாடியே நட்டேன்’ என்பார், ‘நாடி நட்டேன் ஆதலால் நான் மறக்கில்லேன்’ என்றருளினார். 6. பொ-ரை: மேற்கிலுள்ள திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கும், நீரைப் பொழிகின்ற குளிர்ந்த மேகம் போல்பவனே, யாவர்க்கும், தலைவனே, இயமனை உதைத்தவனே, அடியவர் அகங்களில் பால் தயிர் நெய் இவைகளை மகிழ்ச்சியோடு ஆடுகின்ற, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில் உடையவனே, திரு நாட்டியத்தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, துன்பங்கள் படுமாறு அமைந்த ஊழினது தன்மையால், நாள்பட்ட துன்பங்களை எல்லாம் நீ படுத்தினாய் என்று சொல்லி நான் முறையிடமாட்டேன். நீ என்னை விட்டு நீங்குவாயாயினும், நான் உன் திருவடியைப் பெறுதற்கே முயல்வேன்; இஃது என் அன்பிருந்தவாறு.
|