152. | ஐவாய் அரவினை மதியுடன் வைத்த | | அழகா அமரர்கள் தலைவா | | எய்வான் வைத்ததொர் இலக்கினை அணைதர | | நினைந்தேன் உள்ளம்உள் ளளவும் | | உய்வான் எண்ணிவந் துன்னடி யடைந்தேன் | | உகவா யாகிலும் உகப்பன் | | நைவா னன்றுனக் காட்பட்ட தடியேன் | | நாட்டியத் தான்குடி நம்பீ. | | 7 |
153. | கலியேன் மானுட வாழ்க்கைஒன் றாகக் | | கருதிடிற் கண்கள்நீர் மல்கும் | | பலிதேர்ந் துண்பதொர் பண்புகண் டிகழேன் | | பசுவே ஏறினும் பழியேன் |
கு-ரை: ‘பட’ என்பதன்பின் ‘அமைந்த’ என்பது வருவிக்க. ‘படற்பாற்றன்மையின்’ என்பதே பாடம் எனலுமாம். அல்லல் பறைதல் - துன்பத்தை எடுத்துப் பலரும் அறியக் கூறுதல், ‘மேற்கு’ என்றது சோழநாட்டின் மேற்குப் பகுதியை. 7. பொ-ரை: ஐந்து தலைப் பாம்கினைச் சந்திரனோடு முடியில் வைத்துள்ள அழகனே, தேவர்கட்டுத் தலைவனே, திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, நான் அன்று உனக்கு ஆட்பட்டது, துன்பத்தால் வருந்துதற்கு அன்று; துன்பத்தினின்றும் உய்ந்து, இன்பம் உற எண்ணிவந்தே உன் திருவடியை அடைந்தேன்; அதனால், நீ என்னை விரும்பாதொழியினும், நான் உன்னை விரும்பியே நிற்பேன்; ஆதலின், நான் எய்தற்கு வைத்த குறியினை உயிருள்ள அளவும் எவ்வாற்றாலேனும் அடையவே நினைத்தேன்; இஃது என் அன்பிருந்தவாறு. கு-ரை: சுவாமிகள் கொண்ட குறியாவது இறைவன் திருவடிப் பேறே என்பதும், அதுவே துன்பம் இல்லாததும், துன்பத்தினின்றும் எடுத்து இன்பம் தருவதும் ஆகும் என்பதும், அதனை அடைதற்கு அவன் மாட்டுச் சலியாத அன்பு செய்தல் வேண்டும் என்பதும் உணர்க. 8. பொ-ரை: திருநாட்டியத்தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, யான் இம்மானுட வாழக்கையை ஒருபொருளாக நினைத்துச்
|