பக்கம் எண் :

555
 
வலியே யாகிலும் வணங்குதல் ஒழியேன்

மாட்டேன் மறுமையை நினைய

நலியேன் ஒருவரை நான்உனை யல்லால்

நாட்டியத் தான்குடி நம்பீ.

8

154.குண்டா டிச்சமண் சாக்கியப் பேய்கள்

கொண்டா ராகிலுங் கொள்ளக்

கண்டா லுங்கரு தேன்எரு தேறுங்

கண்ணா நின்னல தறியேன்

தொண்டா டித்தொழு வார்தொழக் கண்டு

தொழுதேன் என்வினை போக

நண்டா டும்வயல் தண்டலை வேலி

நாட்டியத் தான்குடி நம்பீ.

9



செருக்கேன்; இதன் நிலையாமை முதலியவற்றை நினைத்தால், கண்களில் நீர் பெருகும், ஆதலின் பிச்சை எடுத்து உண்ணும் உனது இயல்பைக் கண்டும், அதுபற்றி உன்னை இகழேன்; நீ எருதையே ஏறினாலும் அதுபற்றி உன்னைப்பழியேன்; எனக்கு மெலிவு நீங்க வலியே மிகினும், உன்னை வணங்குதலைத் தவிரேன்; மறுமை இன்பத்தையும் நினைக்கமாட்டேன்; உன்னையன்றி வேறொருவரை நீங்காது நின்று இரக்கமாட்டேன்; இஃது என் அன்பிருந்தவாறு.

கு-ரை: இப் பிறவிதான் இனிவரும் பிறவிக்குக் காரணமாகா தொழிதலும், தாமே வர நின்ற அப் பிறவிகளை வாராது அழித்தொழிக்குங் கருவியாதலும் சிவபிரானை வணங்குதல் ஒன்றாலன்றிப் பிறவாற்றாற் கூடாமையின், "இகழேன்" என்பது முதலாக அருளினார். ‘கண்கள் நீர் பில்கும்’ என்பதும் பாடம். ‘நினையேன்’ என்பது பாடமாகாமை அறிக. ‘நலிதல்’ என்பது இங்கு, உதவுமாறு இடைவிடாது சென்று வேண்டுதலைக் குறித்தது.

9. பொ-ரை: எருதினை ஏறுகின்ற, எனக்குக் கண்போலச் சிறந்தவனே, நண்டுகள் விளையாடும் வயல்களையும், சோலையாகிய வேலியையும் உடைய திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளி யிருக்கின்ற நம்பியே, சமணரும், சாக்கியரும் ஆகிய பேய்கள் மூர்க்கத் தன்மையை மேற்கொண்டு தாங்கள் பிடித்தது சாதித்தார் என்பது கேள்வியால் அறியப்பட்டாலும், அதனை நேரே கண்டாலும் அதனை