பக்கம் எண் :

556
 
155.கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற

கொடிறன் கோட்புலி சென்னி

நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி

நம்பியை நாளும் மறவாச்

சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்

திருவா ரூரன் உரைத்த

பாடீ ராகிலும் பாடுமின் தொண்டீர்

பாடநும் பாவம்பற் றறுமே.

10

திருச்சிற்றம்பலம்


யான் ஒரு பொருளாக நினையேன்; உன்னையன்றி பிறிதொரு கடவுளை நான் அறியேன்; உனது தொண்டினை மேற்கொண்டு உன்னைத் தொழுகின்ற பெரியோர்கள் அங்ஙனம் தொழும்பொழுது கண்டு, அதுவே நெறியாக என் வினைகள் ஒழியுமாறு உன்னை யான் தொழத் தொடங்கினேன். இஃது என் அன்பிருந்தவாறு.

கு-ரை: ‘கொள்ளுதல்’ என்பது இங்கு, கொண்டதையே விடாமல் பற்றுதலைக் குறித்தது. பின்னர். "கண்டாலும்" என்றதனால், முன்னர் உள்ளது, கேட்டதாதல் பெறப்பட்டது. ‘நின்னலது கண்ணாக அறியேன்’ என்று உரைப்பினுமாம். "தொண்டாடித் தொழுவார் தொழக்கண்டு தொழுதேன்" என்பதனை,

"ஞானத் தால்தொழு வார்சில ஞானிகள்
ஞானத் தால்தொழு வேன்உனை நானலேன்
ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு
ஞானத் தால்உனை நானுந் தொழுவனே" 

(தி. 5 ப. 91 பா. 3)

என்னும் அப்பர் திருமொழியுடன் வைத்து நோக்குக.

10. பொ-ரை: அடியவர்களே, பிற பாடல்களை நீர் பாட மறந்தாலும், பகையரசரை அவர் எதிர்ப்பட்ட ஞான்று தப்பிப் போக விடாது வென்ற கொடிறு போல்பவராகிய கோட்புலி நாயனார்க்கு இடமாயதும், சோழனது நாட்டில் உள்ளதும், பழமையான புகழை யுடையதும், ஆகிய திருநாட்டியத்தான்குடியில் எழுந்தருளி யிருக்கின்ற நம்பியை, அவனை ஒரு நாளும் மறவாத, திரட்சியமைந்த, பூவை யணிந்த கூந்தலையுடைய, ‘சிங்கடி' என்பவளுக்குத் தந்தையாகிய, திரு