வுடைய நம்பியாரூரன் பாடிய பாடல்களைப் பாடுங்கள். பாடின், உங்கள் பாவங்கள் எல்லாம் பற்றற்று ஒழியும். கு-ரை: கொடிறு (குறடு) தன்கண் அகப்பட்டதனை மீள விடாது பிடித்தலின், அஃது எதிர் வந்த பகைவரை மீளவிடாது அழிக்கும் நாயனார்க்கு உவமையாம். ஆகவே, "கொடிறன்" என்றது, உவமத் தொகைப் பொருண்மைத்தாய குறிப்பு வினைப் பெயராதல் அறிக. ‘சிங்கடி’ என்பாள், கோட்புலி நாயனார்தம் பெண் மக்கள் இருவருள் ஒருத்தி. மற்றொருத்தியின் பெயர் ‘வனப்பகை’ என்பது. இவட்குத் தந்தை என்று சுவாமிகள் வேறு பதிகத்துள் தம்மைக் குறித்தருளுவர். இவ்விருவரையும் நம்பியாரூரர் தம் மக்களாக ஏற்றுக் கொண்ட வரலாற்றைப் பெரிய புராணத்துட் காண்க.
ஏயர்கோன் கலிக்காமர் புராணம் | | வென்றி வெள்ளேறு உயர்த்தருளும் | விமலர் திருக்கோ புரம்இறைஞ்சி | ஒன்றும் உள்ளத் தொடும் அன்பால் | உச்சி குவித்த கரத்தோடும் | சென்று புக்குப் பணிந்துதிருப் | பதிகம் பூணான் என்றெடுத்துக் | கொன்றை முடியார் அருளுரிமை | சிறப்பித் தார்கோட் புலியாரை. | 41 | - தி. 12 சேக்கிழார் |
|