பக்கம் எண் :

559
 
157.செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி

செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி

இருள்மேவும் அந்தகன்மேல் திரிசூலம் பாய்ச்சி

இந்திரனைத் தோள்முரித்த இறையவன்ஊர் வினவில்

பெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும்

பிள்ளையினந் துள்ளிவிளை யாட்டொலியும் பெருகக்

கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங்

களிவண்டின் கணம்இரியும் கலயநல்லூர் காணே. 

2



அருகே கரிய குவளை மலர் கண்ணுறங்குகின்ற வயல்களில் தாமரைகள் முகமலரும் திருக்கலயநல்லூரே; அறிக.

கு-ரை: சிவபிரான் உமையம்மையாரது தவச்சாலையில் முதிய வேதியனாய்ச் சென்று அவரது அன்பினைச் சோதித்தறிந்து அவரை மணந்தருளிய வரலாற்றைக் கந்த புராணத்துட் காண்க. ‘அருக’ என்பது, ‘அருவ’ என மருவி வந்தது; ‘அருக’ என்றே பாடம் ஓதுதலும் ஆம். அருகுதல் - மென்மையாக இசைத்தல். இதனைச் சுருதி கூட்டுதல் என்ப. குவளை சந்திரன்முன் மலர்ந்து, சூரியன்முன் குவிவதும், கண் போலத் தோன்றுவதும் ஆதலின், காலையில் அது கண் வளர்வது போலக் காணப்படுவதாயிற்று. "கண்வளரும்", "முகமலரும்" என்பன குறிப்புருவகங்கள். தம்மை வினவும் மாணாக்கன் ஒருவனுக்கு அருளிச் செய்யுமாற்றான் அருளுதலின், ‘வினவின், காண்’ என்றருளினார்.

2. பொ-ரை: ‘போரை விரும்பிய சலந்தராசுரனை அழித்த ஒளியையுடைய சக்கரத்தை, தன் சிவந்த கண்ணாகிய மலரையே தாமரை மலராகச் சாத்தி, வழிபாட்டிற் சிறந்து நின்றவனாகிய திருமாலுக்கு அளித்து, இருள் போலும் அந்தகாசுரன் மேல் கூர்மையான சூலத்தைப் பாய்ச்சி அழித்து, இந்திரனைத் தோள் முரித்த கடவுளது ஊர் யாது?’ என்று வினவின், மிக்க பேரறிவைத்தரும் வேதத்தினது ஓசையும், முரசு, மத்தளம் ஆகிய வாச்சியங்களது ஓசையும், சிறுவர் கூட்டம் துள்ளி விளையாடுதலின் ஓசையும் மிக்கெழுதலினால், கரிய எருமை நீரிற் புக, அதனால் துள்ளி எழுந்த கயல் மீன்கள், தாமரை மலரின்மேல் நெருங்கி விழ, தாமரை மலரைச் சூழ்ந்திருந்த களிப்புடைய வண்டுகளின் கூட்டம் அஞ்சி ஓடுகின்ற திருக்கலயநல்லூரே; அறிக.

கு-ரை: சிவபிரான் சலந்தராசுரனைச் சக்கரத்தால் அழித்து, பின் அச்சக்கரத்தினைத் திருமாலுக்கருளின வரலாற்றினைக் கந்தபுராணம்