பக்கம் எண் :

560
 
158.இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது இயற்றி

இனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள்

துண்டமிடு சண்டியடி அண்டர்தொழு தேத்தத்

தொடர்ந்தவனைப்பணிகொண்ட விடங்கனதூர்வினவில்

மண்டபமும் கோபுரமும் மாளிகைசூ ளிகையும்

மறைஒலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக்

கண்டவர்கள் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக்

காரிகையார் குடைந்தாடுங் கலயநல்லூர் காணே. 

3

159.மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தான்

மகிழ்ந்தவள்கண் புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா

உலகுடன்றான் மூடவிருள் ஓடும்வகை நெற்றி

ஒற்றைக்கண் படைத்துகந்த உத்தமனூர் வினவில்



ததீசி யுத்தரப் படலத்துட் காண்க. தக்கன் வேள்வியில் சிவபிரான் இந்திரன் தோளைத் துணித்ததாகவும் வரலாறு உண்டு. (தி. 6) ‘கமலக் களிவண்டு’ என்பது மெலித்தலாயிற்று. இவ்வாறன்றி, இயல்பாகவே கொண்டு, ‘இரியப் பெறும்’ என்று உரைத்தலுமாம்.

3. பொ-ரை: ‘இண்டை மாலையும் விடுபூவும் திரட்டிக்கொண்டு சென்று மண்ணியாற்றில் மணல் இலிங்கத்தை அமைத்து, கூட்டமான பசுக்களின் பாலைக் கொணர்ந்து சொரிய, அதனைக்கண்டு வெகுண்டு காலால் இடறிய தந்தையின் தாளை வெட்டிய சண்டேசுர நாயனாரது திருவடிகளைத் தேவர்களும் தொழுது துதிக்கும்படி, அவரை விடாது சென்று ஆட்கொண்ட அழகனது ஊர் யாது?’ என்று வினவின், மண்டபங்களிலும், கோபுரங்களிலும், மாளிகைகளிலும், சூளிகைகளிலும் வேதங்களின் ஓசையும், மங்கல ஓசைகளும் வீதிகளில் நிரம்புதல் பொருந்திக் கண்டவர்களது மனத்தைக் கவர்கின்ற, தாமரைப் பொய்கைகளில் மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருக்கலயநல்லூரே; அறிக.

கு-ரை: சண்டேசுர நாயனாரது வரலாற்றினைப் பெரிய புராணத்துட் காண்க. ‘சூளிகை’ என்றது, அதனையுடைய மேல் மாடத்தைக் குறித்தது.

4. பொ-ரை: ‘மலைமகள், விளையாட்டை மேற்கொண்டு மகிழ்ச்சி மேலிட்டவளாய், அவளது வளைபொருந்திய கைகளால்