| அலைஅடைந்த புனல்பெருகி யானைமருப் பிடறி | | அகிலொடுசந் துந்திவரும் அரிசிலின்தென் கரைமேல் | | கலையடைந்து கலிகடியந் தணர்ஓமப் புகையால் | | கணமுகில்போன் றணிகிளருங் கலயநல்லூர் காணே. | | 4 |
160. | நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா | | நிறைந்தமரர் குறைந்திரப்ப நினைந்தருளி யவர்க்காய் | | வெற்பார்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார் | | புரமூன்றும் எரிவித்த விகிர்தனூர் வினவில் | | சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும் | | தோத்திரமும் பலசொல்லித் துதித்திறைதன் திறத்தே | | கற்பாருங் கேட்பாரு மாயெங்கும் நன்கார் | | கலைபயில்அந் தணர்வாழுங் கலயநல்லூர் காணே. | | 5 |
தனது கண்களை மூடினமையால், எல்லா உலகங்களையும் ஒருங்கே வலிய இருள் பரந்து மூடிக்கொள்ள, அவ்விருள் நீங்கும்படி நெற்றியிடத்து ஒரு கண்ணைத் தோற்றுவித்து அருள் புரிந்த மேலானவனது ஊர் யாது?‘ என்று வினவின், அலை பொருந்திய நீர் பெருக்கெடுத்து, யானைத் தந்தத்தைப் புரட்டி அகில் மரத்தையும், சந்தன மரத்தையும் தள்ளிக்கொண்டு வருகின்ற அரிசிலாற்றின் தென்கரைமேல் உள்ள, நூல்களை யுணர்ந்து அந்நெறியானே வறுமையை ஓட்டுகின்ற அந்தணர்களது வேள்விப்புகையால், கூட்டமாகிய மேகத்தின் தோற்றம் போன்ற அழகு மிகுகின்ற திருக்கலயநல்லூரே; அறிக. கு-ரை: அம்மை திருக்கண் புதைத்த வரலாற்றினை, பெரிய புராணம், காஞ்சிப் புராணங்களுட் காண்க. "கலையடைந்து கலிகடி யந்தணர்" என்றதனை, "கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லை" (தி. 1 ப. 80 பா. 1) என்ற திருஞானசம்பந்தர் திருமொழியோடு ஒருங்குவைத்துணர்க. ‘போன்ற’ என்பதன் ஈற்றகரம் தொகுத்தலாயிற்று. 5. பொ-ரை: ‘தன்னை வழிபடுவோர்க்கு நின்ற கோலமாய்த் தோன்றுபவனாகிய திருமாலும், தாமரை மலரில் இருப்பவனாகிய
|