161. | பெற்றிமைஒன் றறியாத தக்கனது வேள்விப் | | பெருந்தேவர் சிரந்தோள்பல் கரங்கள்பீ டழியச் | | செற்றுமதிக் கலைசிதையத் திருவிரலால் தேய்வித் | | தருள்பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில் | | தெற்றுகொடி முல்லையொடு மல்லிகைசெண் பகமும் | | திரைபொருது வருபுனல்சேர் அரிசிலின்தென் கரைமேல் | | கற்றினம்நல் கரும்பின்முளை கறிகற்கக் கறவை | | கமழ்கழுநீர் கவர்கழனிக் கலயநல்லூர் காணே. | | 6 |
பிரமனும் முதல்வராகத் தேவர் பலரும் குறையுடையராய் நிறைந்து வந்து இரக்க, அவரது துன்பத்தைத் திருவுள்ளத்தடைத்து அவர் பொருட்டாக, மலையாகிய வில்லும், பாம்பாகிய நாணியும், தீயாகிய அம்பும் என்னும் இவற்றால் பகைவரது முப்புரங்களையும் எரித்தொழியச் செய்த, உலகியலுக்கு வேறுபட்டவனது ஊர் யாது?’ என்று வினவின், சொல்வகைகள் பலவற்றையும், பொருள் வகைகள் பலவற்றையும் உடைய வேதங்கள் நான்கையும், தோத்திரங்கள் பலவற்றையும் சொல்லித் துதிக்குமாற்றால் இறைவனது நெறிக்கண் கற்பாரும் கேட்பாருமாய் நின்று, எவ்விடத்திலும் நன்மை யமைந்த நூல்களைப் பயில்கின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருக்கலயநல்லூரே காண். கு-ரை: சிவபிரான் திரிபுரம் எரித்த வரலாறு காஞ்சிப் புராணத்திலும், திருவிற்கோலப் புராணத்திலும் விரித்தோதப்பட்டது. மாயோன் கோலங்கள் பலவற்றுள் அர்ச்சனைக்குரியது நின்ற கோலமே என, அவனை வழிபடுவோர் கொள்ளுதலின், "நிற்பான்" என்று அருளினார். ஏனைய கோலங்களை வழிபடுங்கால் அவ்வந்நிலை கருதியே வழிபடுவர் என்க. ‘தோத்திரம்’ என்றது தமிழ்ப் பாடல்களை. "இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்" என்றருளினார் ஆளுடைய அடிகளும் (தி. 8 திருவா - திருப்பள்ளி - 4). சுருதியொரு நான்குமே யன்றித் தோத்திரமும் பல சொல்லுதற்குரியார் அந்தணர் என்பது, இத்திருப்பாடலின்கண் இனிது விளங்க அருளிச் செய்யப் பட்டமையின், ‘வேதத்தில் உரிமை யில்லாதாரே தமிழ்ப் பாடல்களாகிய தோத்திரங்களைச் சொல்லுதற்கு உரியார்’ என்பது, அறியாதார் கூற்றே என்பது தெற்றென உணர்க. 6. பொ-ரை: ‘தக்கது சிறிதும் அறியாத தக்கனது வேள்வியில் பெரிய தேவர்கள், தங்கள் தலை, தோள், பல், கை, கண் என்னும் உறுப்புக்கள் வலிமையழிந் தொழியுமாறு ஒறுத்து, சந்திரனது கலைகள் சிதையும்படி கால் திருவிரலால் தேய்த்து, பின்பு அவர் எல்லாரிடத்தும்
|