162. | இலங்கையர்கோன் சிரம்பத்தோ டிருபதுதிண் தோளும் | | இற்றலற ஒற்றைவிரல் வெற்பதன்மேல் ஊன்றி | | நிலங்கிளர்நீர் நெருப்பொடுகாற் றாகாசம் ஆகி | | நிற்பனவும் நடப்பனவாம் நின்மலன்ஊர் வினவில் | | பலங்கள்பல திரைஉந்திப் பருமணிபொன் கொழித்துப் | | பாதிரிசந் தகிலினொடு கேதகையும் பருகிக் | | கலங்குபுனல் அலம்பிவரும் அரிசிலின்தென் கரைமேல் | | கயல்உகளும் வயல்புடைசூழ் கலயநல்லூர் காணே. | | 7 |
கருணையை மிக வழங்கிய சிவபெருமான் சேர்ந்திருக்கும் ஊர் யாது?’ என்று வினவினால், பின்னிக்கிடக்கின்ற முல்லைக் கொடியோடு, ‘மல்லிகைக் கொடி, சண்பகமரம்’ என்னும் இவைகளும் அலைகளால் உந்தப்பட்டு வருகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில், கன்றுக்கூட்டம் நல்ல கரும்பின் முளையில் கறித்தலைப் பழக, பசுக் கூட்டம், மணம் வீசுகின்ற செங்கழுநீர்க் கொடியை மேய்கின்ற வயல்களையுடைய திருக்கலயநல்லூரே ; அறிக. கு-ரை: தக்கன் வேள்வியில் எச்சன் (வேள்வித் தேவன்) தலையும், இந்திரன் தோளும், சூரியன் பல்லும், அக்கினி கையும், ‘பகன்’ என்னும் மற்றொரு சூரியன் கண்ணும் இழந்தனர் என்க. சிவபிரான் தக்கன் வேள்வி அழித்த வரலாற்றைக் கந்தபுராணத்துட் காண்க. ‘சந்திரனைக் காலால் தேய்த்தனன்’ எனப் புராணங்கூறும். 7. பொ-ரை: ‘இலங்கைக்கு அரசனாகிய இராவணன் தனது பத்துத் தலைகளும், இருபது தோள்களும் சிதைந்து அரற்றுமாறு ஒரு விரலைக் கயிலை மலையின்மேல் ஊன்றி, ‘நிலம், மிக்க நீர், நெருப்பு, காற்று, வானம், என்னும் பெரும் பொருள்களாகியும், நிற்பனவும் நடப்பனவுமாகிய உயிர்களாகியும் நிற்கின்ற தூயவனுடைய ஊர் யாது?’ என்று வினவினால், அலைகளால் பல பழங்களைத் தள்ளி, பெரிய மாணிக்கங்களையும் பொன்னையும் கொழித்து, ‘பாதிரி, சந்தனம், அகில்’ என்ற மரங்களையும், தாழம் புதர்களையும் உள்வாங்கி. இவற்றால் எல்லாம் கலங்கல் பொருந்திய நீர், ஆரவாரித்து வருகின்ற அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள கயல் மீன்கள் பிறழும் வயல்கள் புடை சூழ்ந்த திருக்கலயநல்லூரே; அறிக. கு-ரை: சிவபிரான் இராவணனை நெரித்த வரலாற்றை இராமாயணம் உத்தரகாண்டத்தில் காண்க.
|