163. | மாலயனுங் காண்பரிய மால்எரியாய் நிமிர்ந்தோன் | | வன்னிமதி சென்னிமிசைவைத்தவன்மொய்த்தெழுந்த | | வேலைவிடம் உண்டமணி கண்டன் விடை ஊரும் | | விமலன்உமை யவளோடு மேவிய ஊர் வினவில் | | சோலைமலி குயில்கூவக் கோலமயில் ஆலச் | | சுரும்பொடுவண்டிசை முரலப்பசுங்கிளி சொல்துதிக்கக் | | காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து | | கசிந்தமனத்தவர்பயிலுங் கலயநல்லூர் காணே. | | 8 |
164. | பொரும்பலம் துடையசுரன் தாரகனைப் பொருது | | பொன்றுவித்தபொருளினை முன்படைத்து கந்தபுனிதன் | | கரும்புவிலின் மலர்வாளிக் காமன்உடல் வேவக் | | கனல்விழித்த கண்ணுதலோன் கருதும்ஊர் வினவில் | | இரும்புனலுவெண் டிரைபெருகி ஏலம்இல வங்கம் | | இருகரையும் பொருதலைக்கும் அரிசிலின்தென்கரைமேல் | | கரும்புனைவெண் முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக் | | கவின்காட்டுங் கடிபொழில்சூழ் கலயநல்லூர் காணே. | | 9 |
8. பொ-ரை: 'திருமாலும் பிரம்மனும் அடிமுடி தேடி அறியாதபடி நெருப்புருவமாய் நீண்டு நின்றவனும்,வன்னியும்,பிறையும் சடையிற் சூடியவனும்கடலிற் தோன்றியவிடத்தை உண்டு கறுத்த நீலமணி போலும் கண்டத்தை உடையவனும்,இடபவாகனத்தை ஊர்பவனும் ஆகிய இறைவன் உமாதேவியோடு விரும்பியிருக்கின்ற ஊர் யாது? 'என்று வினவினாள்,சோலைகளில் நிறைந்த குயில்கள் கூவவும்,அழகிய மயில்கள் ஆடவும்,சுரும்பும் வண்டும் இசை கூட்டவும்,பசிய கிளிகள்தாம் கேட்டவாறே சொல்லி இறைவனைத் துதிக்கும்படி,காலை,மாலை இரண்டு பொழுதிலும் இறைவனது திருவடிகளை வணங்கி,உருகிய மனத்தை உடைய அடியார்கள் மிக்கிருக்கின்ற திருகெகலயநல்லூரே;அறிக. கு-ரை: திருமாலும் பிரமனும் அடிமுடி தேடியது இலிங்க புராணவரலாறு.அதனை கந்த புராணத்துள்ளும் விளங்கக்காணலாம். 9. பொ-ரை: போர் செய்கின்ற வலிமையையுடைய அசுரனாகிய,'தாரகன்'என்பவனை போர் செய்து அழியச்செய்த முதல்வனாகிய முருகனை முன்பு படைத்து, அவனைத் தன் மகனாக
|