165. | தண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்தழகார் தலத்தில் | | தடங்கொள்பெருங் கோயில்தனில் தக்கவகை யாலே | | வண்கமலத் தயன்முன்னாள் வழிபாடு செய்ய | | மகிழ்ந்தருளி இருந்தபரன் மருவியஊர் வினவில் | | வெண்கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின் | | விரைமலரும் விரவுபுனல் அரிசிலின்தென் கரைமேல் | | கண்கமுகின் பூம்பாளை மதுவாசங் கலந்த | | கமழ்தென்றல் புகுந்துலவு கலயநல்லுர் காணே. |
விரும்பிக்கொண்ட தூயவனும்,கரும்பினால் இயன்ற வில்லையும்,மலர்களால் இயன்ற அம்புகளையுடையவனாகிய மன்மதன் உடம்பு வெந்தொழியுமாறு நெருப்பாக நோக்க கண்ணையுடைய நெற்றியையுடையவனும் ஆகிய சிவபெருமான் தனக்கு இருப்பிடமாகக் கொள்ளும் ஊர் யாது?' என்று வினவினால், மிக்க நீரினது அலைகள் மேல் எழுந்துசென்று,'ஏலம்,இலவங்கம்'என்னும் மரங்களோடே இருகரைகளையும் மோதியழிக்கின்ற அரிசிலாற்றின் தென்கரையில்,பசிய புன்னை மரங்கள் வெள்ளிய முத்துக்களை அரும்பி,பொன்னை மலர்ந்து,பவளத்தினது அழகைக் காட்டுகின்ற நறுமனணச்சோலைகள் சூழ்ந்த திருக்கலயநல்லூரே;அறிக. கு-ரை: கந்தபுரணத்துள் முருகன் சூரபதுமன் முதலிய மூலர் அசுரரை அழிக்கத் தோன்றிய வரலாறே காணப்படுகின்றது.சிவபிரான் மன்மதனை எரித்த வரலாற்றையும் கந்தபுராணத்துட் காண்க.'கருமை'என்றது,பசுமையை. 'முத்து,பொன்,பவளம்'என்பன உருவகத்தால் அரும்பையும்,மலரையும்,மலர்கள் உள்ள பொகுட்டையும் குறித்தன. 10. பொ-ரை: குளிர்ச்சியை உடைய தாமரைக் குளங்கள் நாற்புரத்தும் சூழப்பெற்ற ஊரில், திரிக்குளத்தைக் கொண்ட பெருங்கோயிலின்கண் முறைப்படி,வளவிய தாமரை மலரில் இருக்கும் பிரமதேவன் முற்காலத்தில் வழிபாடு செய்ய, அதற்கு மகிழ்ச்சியுற்று இருந்த சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஊர் யாது?'என்ளு வினவினாள்,வெண்மையான கவரி மயிரும்,நீலமான மயில் இறகும்,வேங்கமரம்,கோங்கமரம் இவற்றினது வாசனை பொருந்திய மலர்கலும் கலந்து வருகின்ற நீரையுடைய அரிசிலாற்றின் தென்கரையில்,கணுக்களையுடைய கமுக மரத்தின் அழகிய பாளையில் வண்டுகள் சேர்த்த தேனினது வாசனையோடு கலந்த பல மணங்களை வீசும தென்ற ற் காற்றுப் புகுந்து உலாவுகின்ற திருக்கலயநல்லூரே;அறிக.
|