பக்கம் எண் :

567
 

17. திருநாவலூர்

பதிக வரலாறு:

சுவாமிகள் திருவாரூரிலிருந்து புறப்பட்டுப் பல தலங்களை வணங்கிக்கொண்டு தொண்டைநாடு நோக்கிச் செல்லும் பொழுது நடுநாட்டில் உள்ள தலங்களையும் வணங்குங்கால் தாம் அவதரித்த தலமாகிய திருநாவலூரையடைந்து வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏ. கோ. புரா. 169)

குறிப்பு: இத்திருப்பதிகம் சுவாமிகள் தாம் அவதரித்தருளிய திருநாவலூரை அடைந்தபொழுது, முன்பு தம்மை இறைவர் திருவெண்ணெய்நல்லூர்க்குக் கொண்டு சென்று, ஆங்குள்ள சபைமுன் வழக்கிட்டு ஆட்கொண்ட பேரருட் செயலை நினைந்து அருளிச் செய்தது.

பண்: நட்டராகம்

பதிக எண்: 17

திருச்சிற்றம்பலம்

167.கோவலன் நான்முகன் வானவர்

கோனுங்குற் றேவல்செய்ய

மேவலர் முப்புரம் தீயெழு

வித்தவர் ஓரம்பினால்

ஏவல னார்வெண்ணெய் நல்லூரில்

வைத்தெனை ஆளுங்கொண்ட

நாவல னார்க்கிடம் ஆவது

நந்திரு நாவலூரே. 

1



1. பொ-ரை: ஓர் அம்பினாலே பகைவரது திரிபுரத்தில் தீ எழுமாறு செய்தவரும், அதனால், ‘அம்பு எய்தலில் வல்லவர்’ எனப் புகழத்தக்கவராயினாரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையுங்கொண்ட வழக்கு வல்லவரும் ஆகிய இறைவருக்கு, ‘திருமால், பிரமன், இந்திரன்’ என்னும் இவரும் வந்து சிறிய பணி விடைகளைச் செய்யுமாறு இடமாய் இருப்பது, நமது திருநாவலூரே யாகும்.

கு-ரை: ‘வானவர்கோன்’ என்பதன் இறுதியில் செவ்வெண்ணின் தொகைபட வந்த ‘இவர்’ என்பது தொகுத்தலாயிற்று. உம்மை