168. | தன்மையி னால்அடி யேனைத்தாம் | | ஆட்கொண்ட நாட்சபைமுன் | | வன்மைகள் பேசிட வன்றொண்டன் | | என்பதோர் வாழ்வுதந்தார் | | புன்மைகள் பேசவும் பொன்னைத்தந் | | தென்னைப்போ கம்புணர்த்த | | நன்மையி னார்க்கிடம் ஆவது | | நந்திரு நாவலூரே. | | 2 |
இரண்டனுள் முன்னையது சிறப்பு; பின்னையது, இறந்தது தழுவிய எச்சம். எல்லாத்திருப்பாடல்களிலும், "வைத்து" என்றவற்றை அசை நிலை எனினுமாம். ‘நம் திருநாவலூர்’ என்னும் ஆறாவதன் தொகை இங்கு, நிகழ்காலத்து உரிமையோடு இறந்த காலத்து உரிமையும் பற்றி நிற்பதாம்; ‘வினைக் குறிப்புப் பெயரே ஆறன் உருபேற்ற பெயராய் நிற்கும்’ என்பது சேனாவரையர்க்குங் கருத்து என்பது அவரது உரை பற்றி உய்த்துணர்ந்து கொள்க. 2. பொ-ரை: தமக்கு இயல்பாக உள்ள ‘பேரருளுடைமை’ என்னுங் குணத்தினால், என் பிழையைத் திருவுளங்கொள்ளாது, அடிமை என்பது ஒன்றையே கருதி, என்னைத் தாம் ஆட்கொள்ள வந்த அந்நாளின்கண் பலர் கூடியிருந்த சபை முன்பு தம்மைஎன் பேதைமையால் வசைச் சொற்கள் பல சொல்லவும் அவற்றை இசைச் சொற்களாகவே மகிழ்ந்தேற்று எனக்கு, ‘வன்றொண்டன்’ என்பதொரு பதவியைத் தந்தவரும், பின்னரும் நான் கெழுதகைமையை அளவின்றிக்கொண்டு பல வசைப் பாடல்களைப் பாட அவற்றிற்கும் மகிழ்ந்து, எனக்கு வேண்டுமளவும் பொன்னைக் கொடுத்துப் போகத்தையும் இடையூறின்றி எய்துவித்த நன்றிச் செயலை உடையவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது, நமது திருநாவலூரேயாகும். கு-ரை: "என்னை" என்றது உருபு மயக்கம். "புன்மைகள்" என்றது, "பித்தரே ஒத்தொர் நச்சிலராகில் இவரலாது இல்லையோ பிரானார்" (தி. 7 ப. 14 பா. 1) என்றாற்போலும் பாடல்களை.
|