170. | அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற் | | சேவினை ஆட்சிகொண்டார் | | தஞ்சங்கொண் டார்அடிச் சண்டியைத் | | தாமென வைத்துகந்தார் | | நெஞ்சங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் | | வைத்தெனை ஆளுங்கொண்டு | | நஞ்சங்கொண் டார்க்கிடம் ஆவது | | நந்திரு நாவலூரே. | | 4 |
171. | உம்பரார் கோனைத்திண் தோள்முரித் | | தார்உரித் தார்களிற்றைச் | | செம்பொனார் தீவண்ணர் தூவண்ண | | நீற்றர்ஓர் ஆவணத்தால் |
4. பொ-ரை: ஆனிடத்துத் தோன்றுகின்ற ஐந்து பொருள்களை ஆடுதல் செய்பவரும், ஆனேற்றையே ஆளப்படும் பொருளாகக் கொண்டவரும், தம் அடியை யடைந்த சண்டேசுவர நாயனாரை அடைக்கலப் பொருளாகக் கொண்டு அவரைத் தம்மோடு ஒப்ப வைத்து மகிழ்ந்தவரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரிற் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்டு, என் நெஞ்சத்தை ஈர்த்துக்கொண்டவரும், நஞ்சத்தை உண்டவருமாகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது, நமது திருநாவலூரேயாகும். கு-ரை: "அஞ்சும்" என்னும் உம்மையும், எச்சம், விடை, ‘அறம்’ எனப்படுதலேயன்றி, ‘உயிர்’ எனவும் படுமாதலின், "சேவினை ஆட்சிகொண்டார்" என்றது, ‘உயிர்களை அடிமைகளாக உடையவர்’ என்பதைக் குறித்ததாம். சண்டேசுரரைத் தம்மோடு ஒப்ப வைத்தமையாவது, தம் மகனாராகக் கொண்டு, தமது முடி மாலையை வாங்கிச் சூட்டி, அடியார்கட்குத் தலைவராக வைத்து, தம் பரிகல முதலியவற்றை அவர்க்கே உரியவாகச் செய்தமை. 5. பொ-ரை: தேவர்கட்கு அரசனாகிய இந்திரனைத் தோள் முரித்தவரும், யானையை உரித்தவரும், சிவந்த பொன்போல்வதும், நெருப்புப்போல்வதும் ஆகிய நிறத்தை உடையவரும், வெள்ளிய நிறத்தையுடைய நீற்றை அணிந்தவரும் என்போலும் அடியவர்கட்குத் தலைவரும், ஓர் ஆவணத்தினால் என்னைத் திருவெண்ணெய்
|