பக்கம் எண் :

571
 
எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில்

வைத்தெனை ஆளுங்கொண்ட

நம்பிரா னார்க்கிடம் ஆவது

நந்திரு நாவலூரே. 

5

 

172.கோட்டங்கொண் டார்குட மூக்கிலுங்

கோவலுங் கோத்திட்டையும்

வேட்டங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்

வைத்தெனை ஆளுங்கொண்டார்

ஆட்டங்கொண் டார்தில்லைச் சிற்றம்

பலத்தே அருக்கனைமுன்

நாட்டங்கொண் டார்க்கிடம் ஆவது

நந்திரு நாவலூரே. 

6



நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்ட, நம் அனைவர்க்கும் தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது, நமது திருநாவலூரேயாகும்.

கு-ரை: ‘செம்பொன்னார்’ என்பதுஇடைக் குறைந்து நின்றது. ‘ஆர்’ உவம உருபு. ‘செம்பொனார், வண்ணர், தீ வண்ணர்’ எனத் தனித்தனி இயைக்க.

6. பொ-ரை: திருக்குடமூக்கில் (கும்பகோணம்) திருக்கோவலூர், திருப்பரங்குன்றம் இத்தலங்களைக் கோயிலாகக் கொண்டவரும், வேட உருவம் கொண்டு வேட்டையை மேற்கொண்டவரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்டவரும், தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் நடனமாடுதலை மேற்கொண்டவரும், சூரியனை (‘பகன்’ என்பவனை)க் கண் பறித்தவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது நமது திருநாவலூரேயாகும்.

கு-ரை: ‘கோத்திட்டை’ என்பதனை வைப்புத் தலமாகக் கூறுவர். எனினும் ‘பரம்’ என்பதனையே, "கோ" என்றும் ‘குன்று’ என்பதனையே ‘திட்டை’ என்றும் சுவாமிகள், ஒரு நயம் பற்றி அருளிச்செய்தார் என்பது திருப்பரங்குன்றத் திருப்பதிகத்துள் பெறப்படுதலால், இங்கு அவ்வாறே பொருளுரைக்கப்பட்டது. திருப்பரங்குன்றத் திருப்பதிகத்துள், ‘கோத்திட்டை’ என்றதற்கு இவ்வாறு