173. | தாயவ ளாய்த்தந்தை ஆகிச் | | சாதல் பிறத்தலின்றிப் | | போயக லாமைத்தன் பொன்னடிக் | | கென்னைப் பொருந்தவைத்த | | வேயவ னார்வெண்ணெய் நல்லூரில் | | வைத்தெனை ஆளுங்கொண்ட | | நாயக னார்க்கிடம் ஆவது | | நந்திரு நாவலூரே. | | 7 |
174. | வாயாடி மாமறை ஓதிஓர் | | வேதிய னாகிவந்து | | தீயாடி யார்சினக் கேழலின் | | பின்சென்றோர் வேடுவனாய் |
உரையாவிடின். அத்திருப்பதிகத்துள் ஓரிடத்திலும் அத்தலம் சொல்லப்படாததாய்விடும். வேட்டம் கொண்டது, அருச்சுனன் பொருட்டு. 7. பொ-ரை: எனக்குத் தாயாகியும், தந்தையாகியும் இறத்தல் பிறத்தல்கள் இல்லாதவாறு என்னைத் தமது பொன்போலும் திருவடிக்கண் அகலாதபடி இருக்க வைத்த, மூங்கில் இடத்தவரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையும் கொண்ட தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது, நமது திருநாவலூரேயாகும். கு-ரை: "அவள்", பகுதிப் பொருள் விகுதி. "போய் அகலாமை" என்றது. ஒரு சொல் நீர்மைத்து. சிவபெருமான் மூங்கிலை இடமாகக் கொண்டிருந்தமை திருநெல்வேலியில் என்பது, பலரும் அறிந்தது. திருவெண்ணெய்நல்லூரிலும் அவ்வாறு இருந்தமை சொல்லப்படுகின்றது. இனி, "ஏயவனார்" எனப் பிரித்து, "எப்பொருளிலும் பொருந்தியிருப்பவர்" என்று உரைப்பினுமாம். 8. பொ-ரை: தீயின்கண் நின்று ஆடுபவரும், சினம் பொருந்திய ஒரு பன்றியின் பின் வேடுவராய்ச் சென்று வில்தொழிலைப் புரிந்தவரும், பெருமை பொருந்திய வேதத்தை ஓதிக்கொண்டு வேதிய வடிவாய் வந்து சொல்லாடி என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்ட தலைவராகிய இறைவருக்கு இடமாயிருப்பது, நமது திருநாவலூரேயாகும்.
|