| வேயாடி யார்வெண்ணெய் நல்லூரில் | | வைத்தெனை ஆளுங்கொண்ட | | நாயாடி யார்க்கிடம் ஆவது | | நந்திரு நாவலூரே. | | 8 |
175. | படமாடு பாம்பணை யானுக்கும் | | பாவைநல் லாள்தனக்கும் | | வடமாடு மால்விடை ஏற்றுக்கும் | | பாகனாய் வந்தொருநாள் | | இடமாடி யார்வெண்ணெய் நல்லூரில் | | வைத்தெனை ஆளுங்கொண்ட | | நடமாடி யார்க்கிடம் ஆவது | | நந்திரு நாவலூரே. | | 9 |
கு-ரை: "வாய்" என்றது, ஆகுபெயராய், சொல்லையுணர்த்திற்று; சொல்லாவன, ‘என் அடியான் இந்நாவல்நகர் ஊரன்’ என்றது முதலியன. "வேடுவனாய்" என்றது பன்மை ஒருமை மயக்கம். ‘வேய்’ என்பதும் அதனாலாகிய வில்லைக் குறித்தது. "நா" என்பது, தலைமைப் பண்பை யுணர்த்தும் உரிச்சொல்லாய் நிற்கும். அதனடியாகவே, "நாதன், நாயகன், நாயன், நாச்சி" என்னும் சொற்கள் பிறக்கும். நா ஆடியார் - தலைமையை ஆள்பவர், வரையறை இன்மையின், யகர உடம்படு மெய் பெற்று நின்றது. 9. பொ-ரை: படமாடுகின்ற, பாம்பாகிய படுக்கையையுடைய திருமாலுக்கும், பாவைபோலும் நல்லாளாகிய உமாதேவிக்கும், மணிவடம் அசைகின்ற ஆனேற்றுக்கும், ‘பாகன்’ எனப்படும் தன்மையுடையவராய், ஒருநாள் என்னிடம் வந்து, தம் இடமாக ஆளப்பட்டுப் பொருந்தியுள்ள திருவெண்ணெய் நல்லூரில் என்னைக் கொண்டு போய் நிறுத்தி அடிமையும் கொண்ட, நடனமாடும் பெருமானாராகிய இறைவற்கு இடமாயிருப்பது, நமது திருநாவலூரேயாகும். கு-ரை: "படமாடும் அணை" என இயைக்க. "பாகன்" என்பது, "பாகத்தையுடையவன்" எனவும், "நடத்துபவன்" எனவும் உடனிலை யாய் (சிலேடையாய்) நின்று இருபொருள் பயந்து, ஏற்ற பெற்றியான் இயைந்து, பன்மை யொருமை மயக்கமும் ஆயிற்று. "ஒருநாள்" என்றது தமக்குத் திருமணம் தொடங்கிய நாளினை.
|