பக்கம் எண் :

574
 
176.மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத்

தான்வலி யைநெரித்தார்

அடக்கங்கொண் டாவணங் காட்டிநல்

வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்

தடுக்கஒண் ணாததோர் வேழத்

தினையுரித் திட்டுமையை

நடுக்கங்கண் டார்க்கிடம் ஆவது

நந்திரு நாவலூரே. 

10

177.நாதனுக் கூர்நமக் கூர்நர

சிங்க முனையரையன்

ஆதரித் தீசனுக் காட்செயும்

ஊர்அணி நாவலூர்என்

றோதநற் றக்கவன் றொண்டன்ஆ

ரூரன் உரைத்ததமிழ்

காதலித் துங்கற்றுங் கேட்பவர்

தம்வினை கட்டறுமே. 

11

திருச்சிற்றம்பலம்


10. பொ-ரை: தனக்கு வலிமை உண்டு என்று செருக்கி விரைந்து சென்று தமது கயிலை மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனது வலிமையை நெரித்து அழித்தவரும், மூல ஆவணத்தை மறைவாக வைத்திருந்து அதனை நடுவுநிலையாளர் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் காட்டி என்னை அடிமையும் கொண்டவரும், தடுக்க வொண்ணாத வலிமையுடைய யானை ஒன்றினை உரித்து, உமையையும் நடுங்கச் செய்தவருமாகிய இறைவற்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும்.

கு-ரை: "நல்வெண்ணெய்நல்லூர்" என்புழி நன்மை, நடுவு நிலைமையைக் குறித்தது. "நடுக்கங் கண்டார்" என்றது ‘அஞ்சு வித்தார்’ என்னும் பொருளதாய், ‘உமையை’ என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று.

11. பொ-ரை: முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானுக்குரிய ஊரும், நமக்கு உரிய ஊரும், நரசிங்கமுனையரையன் அப்பெரு