பக்கம் எண் :

575
 

மானுக்கு, விரும்பித் தொண்டு செய்யும் ஊரும் அழகிய திருநாவலூரே என்று அனைவரும் உணர்ந்து பாடுமாறு, நல்ல தகுதியை உடையவனும், ‘வன்றொண்டன்’ என்னும் பெயரைப் பெற்றவனுமாகிய நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப்பாடலை விரும்பியும், கற்றும் கேட்பவரது வினைகள் வலியற்று ஒழியும்.

கு-ரை: "நமக்கு ஊர்" என்றது, சுந்தரர் அவதரித்த ஊராதல் பற்றி. ‘நரசிங்கமுனையரையன் ஆதரித்து ஈசனுக்கு ஆட்செய்யும் ஊர்’ என்றமையால், நரசிங்கமுனையரையருக்கு வழிபடுதலம் திருநாவலூராய் இருந்தமை பெறப்படும். நாயனார் இத்திருப்பதிகத்தில் தமது வரலாற்றினை இனிது விளங்க வைத்து அருளிச் செய்தது, நரசிங்கமுனையரையர் வரலாறு, தமது வரலாறு முதலிய பலவற்றையும் அனைவரும் உணர்தற்பொருட்டே என்பது ‘என்று ஓத உரைத்த தமிழ்’ என்பதனால் நன்கு விளங்கும். காதலித்துக் கேட்டல், அன்பு மாத்திரையால் கேட்டல்; கற்றுக் கேட்டல், பொருளை இனிதுணர்ந்து கேட்டல். "அறும்" என்னும் பண்பின் தொழில், ‘வினை’ என்னும் முதலொடு சார்த்தி முடிக்கப்பட்டது.

ஏயர்கோன் கலிக்காமர் புராணம்

  

திருநாவ லூர்மன்னர் சேர்கின்றார் எனக்கேட்டுப்
பெருநாமப் பதியோரும் தொண்டர்களும் பெருவாழ்வு
வருநாள்என் றலங்கரித்து வந்தெதிர்கொண்டுள்ளணையச்
செருநாகத் துரிபுனைந்தார் செழுங்கோயி லுள்ளணைந்தார்.
மேவியவத் தொண்டர்குழாம் மிடைந்தரவென் றெழும்ஓசை
மூவுலகும் போயொலிப்ப முதல்வனார் முன்பெய்தி
ஆவியினும் அடைவுடையார் அடிக்கமலத் தருள்போற்றிக்
கோவலன்நான் முகன்எடுத்துப் பாடியே கும்பிட்டார்.

- தி. 12 சேக்கிழார்