18. திருவேள்விக்குடியும் திருத்துருத்தியும் (மூப்பது மில்லை)
பதிக வரலாறு: வன்றொண்டர் திருஎதிர்கொள்பாடியைத் தொழுது திருவேள்விக்குடியை எய்திப் பெருமானைப் பணிந்து, திருத்துருத்திப் பெருமானையும் உடன் வைத்துப் பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 121) குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவரை, இழிபும் உயர்பும் உடனிலை வகையான் ஒருங்கு தோன்றக் கூறி, அவர்க்கு ஆட்படுதலை மறுத்தலும், உடன்படுதலும் அவ்வாறே தோன்ற, அன்பினால் அருளிச் செய்தது. இழிபு பொருளும், மறுத்தற் பொருளும் தரும்வழி, உயர்பும் உடன்படுதலும் குறிப்பிற் றோன்றும் என்க. இது திருவேள்விக்குடிக்கும், திருத்துருத்திக்கும் உரித்தாக அருளிச் செய்யப்பட்டதாயினும், அத்தலங்கள் முதல் திருப்பாடல் தவிர ஏனைய திருப்பாடல்களில் வாராமையின், இதனை, ‘மூப்பது மில்லைத் திருப்பதிகம்’ என்று, முதனினைப்புப் பெயரானே வழங்குவர். பண்: நட்டராகம்
பதிக எண்: 18
திருச்சிற்றம்பலம்
178. | மூப்பதும் இல்லை பிறப்பதும் | | இல்லை இறப்பதில்லை | | சேர்ப்பது காட்டகத் தூரினு | | மாகச்சிந் திக்கினல்லால் | | காப்பது வேள்விக் குடிதண் | | துருத்திஎங் கோன்அரைமேல் | | ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் | | நாம்இவர்க் காட்படோமே. | | 1 |
1. பொ-ரை: ஆராயுங்கால் எங்கள் தலைவர், பிறத்தலும் இல்லை; பின்பு வளர்ந்து முதுமை அடைதலும் இல்லை; முடிவில் இறந்தொழிதலுமில்லை; உறைவிடம் காட்டிடத்துள்ளது; அதுவன்றி ஊர்களுள் தமக்கு உரித்தாகக் காப்பது திருவேள்விக்குடியும்,
|